TKS

திரு. டி.கே. சண்முகம் அவர்கள் தமிழ்நாட்டில் தலைசிறந்த நடிகர்; இலக்கிய அறிவும் பெற்றவர். எனவே, இலக்கிய ஆராய்ச்சிக் கண்கொண்டும் நாடக அனுபவக் கண்கொண்டும் வரலாற்றுக் கண்கொண்டும் தமிழ் நாடகத்தைக் காணும் வாய்ப்பு அவருக்கு உண்டு. ஆதலால், நாடகக் கலையினைப் பற்றிச் சென்ற ஆண்டே சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அவரை அழைத்திருந்தது. உடல் நலம் இன்மையால் அந்த ஆண்டே அவர் வரமுடியாமல் போய்விட்டது. காலம் தாழ்த்ததில் ஆழ்ந்து எண்ணவும், பரந்து ஆராயவும் இடம் ஏற்பட்டது எனலாம். அவர் இந்த ஆண்டு அக்டோபர் திங்கள் 27, 28, 29-ஆம் நாட்களில் திரு. சீநிவாச சாத்திரியார் மண்டபத்தில் மூன்று சொற்பொழிவுகள் ஆற்றினார் . அதிலிருந்து சில வரிகள் அதிலுள்ள எழத்துக்கள் மேல்கீழாக (மட்டும்) மாற்றப்பட்டுள்ளன . சொற்களை சரி செய்ய வேண்டும் . ( இரண்டு கட்டங்களை அடுத்தடுத்து தட்டினால் அவை இடம் மாறும்)

Comments

Popular posts from this blog

811 muppaalarum

810 asaiva uNavu

807 poo maNakkum