yudhdha boomi

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................

யுத்த பூமி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.மஹாத்மாவின் முதல் யுத்த பூமியில் வதை பட்டு விடுபட்டு ஆண்டு அடங்கியவர் (4)
3.வேலை பின்பாதி வெகுவாக அடக்கமாய் (4)
5.வெடிமருந்து விற்ற பணம் அமைதிக்கு வெகுமதி (3,3)
6.வேகம் குறைந்து இதுவா மெழுகில் கலந்தது? மெய்யொடு இழு வெளியே (4)
7.கஞ்சியில் பொசி (2)
8.சிட்டையிலே உள்ள பொருள் ரெட்டை (3)
9.அவல் நடுவில் உயிர்போக கிளியை வைத்து இம்சிப்பது (5)
11.பார்க்க 11 நெ
12.மலை தீட்டு (2)
13.மனதால் நினைந்து கை இணைவது எத்தனை முறை (5)
14.அன்பும் வீரமும் எதிர் கொண்டது அடம்(3)

நெடுக்காக:
1.நோகாய் மன்ன ! காடு நீங்க சீர் பெறும் உளப்பிணி (2,2)
2.லாபகரமானதில் தலைமேல் நிற்பது இரவா, அல்ல (3)
3.வித்தை அஞ்சுவமென்பது- அதுவிவன் நீக்கி நேரிட்டுத் துயில (3,3)
4.ஆங்கில அதிருஷ்டம் கொண்ட கடல் கண்டபடி இடம் மாற்றல் (6)
7.அங்காடி விழியாள் நாலு இடம் போக (2,3)
8.விடாமல் சிவனை நினை ;இடைவிட்டால் சுமை (2)
9.வந்திழிவர் கைவிட விந்திடர் விட்டலே செயலாற்றும் ஆறு (2,2)
10.ட் டிடை யிட்ட இறைவனை ஓர்தல் குளிர்(4)
11.11 கு வுடன் இணைந்து ஊமைக் காயத்தின் வலிவகை (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

807 poo maNakkum

811 muppaalarum

810 asaiva uNavu