thillaiyaadi

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................

தில்லையாடி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பண் எதிர் புக்க செகம் நாறும்பூ (5)
3.எல்லையிலா மகிழ்ச்சி (3)
5.வைதேகி எதிர்வந்தால் வேறு என்ன வேண்டும் (2)
6.'பேசாமல் பாதி தருவாய் அறிவற்றவளே '(2,2)
7.இன்பமாய் அணை இடைவிட்டு சேர் (2)
8.பின்புற நோய் பற்றியதில்லை ;அடிப்படை புத்தகம் (2,2)
9.வள்ளுவன் தந்தது ; தமிழ் நாடு கொண்டது (2,3)
11.(வறுத்த) ரவா கரியாய் விட்டது சரி செய்து இப்படி தரம் பிரி (2,4)
12.11 ஐ துகள் அளவுப்படி பிரிக்க அலுப்பு (4)
14.12 க்குப்பின் செய்த உப்புமா மிச்சம் (2)
15.தலை மேல் எச்சில் கை; அதில் உயிரும் இல்லை உடலும் இல்லை (2)

நெடுக்காக:
1.வானகம் செல்வாய்; வலமாற்றி தோஷம் பற்றி ஆராயலாம் (4,4)
2.அரசாங்க வேலையில் உயர்வுக்குத் தகுதி அர்ப்பணிப்பு மூலம் காண்க (2,3)
3.இதெல்லாம் ஓரங்கள் இன்றியமையாதவை (2)
4.ராகத்தை உணவு உற்பத்திக்கு பயன் படுத்தலாம் (3)
7.இது தில்லையாடியானால் வள்ளியம்மை எங்கே ?அவர் இன்றேல்..... துதியாடி விடுவோம் ( 6)
8.சரிபாதி நீருக்குள் புக மூவாது வாழ்க (3)
10.மறைக்கப்பட்ட ஓசை அவையில் பாராட்டு (4)
12.மனையாள் சூழ்ச்சி (2)
13.பண்பு சிதையாமல் உண் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

807 poo maNakkum

811 muppaalarum

810 asaiva uNavu