kaNithamEthai


இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும். கணித மேதை

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பைரவதாஸ் கொடுத்ததில் கர்ணத்தை அறுதியிட்ட கணித மேதை (6)
3.அரசாண்டவர் கையில் அளவுகோல் (2)
4.கர்ணத்தில் தொங்கும் தோல் (2)
5.எடைக்கு எடை ராசியான கம்பு (5)
8.விழுவனவும் கேள் வழுவல்ல மெய்யுமல்ல (3)
9.ஈரிரண்டு விழியன் சேய் உண்டபின் மறைவான் (2,4)
10.மஞ்சம் அரை அரை ஈட்டு (4)
15.சிலமாத கடைசிக்கோடு கட்டுவது கஷ்டம் தான் (2)
16.மூடரில் வாங்கி வாரிட வாரா பெரும்புல் ( 4)
17.புல்லைக் கையில் எடுத்து உண்டும் ,உயிர்த்தும், எரித்தும் இடர்ப் படலாம் (4)

நெடுக்காக:
1 பையில் இரை வைக்கும் புள் பெரும்பாலும் மூணுக்கு நாலரையில் அடங்கும் (1,3,2)
2.பேரரக்கனை வீழ்த்தியவன் வீயிடையிட்ட பஞ்ச வருஷம் (3)
3.சாஞ்சாடு பின் மோதி மிதித்திடு (2)
4.வில்லானதோ அதில் வெற்றிக்கு மாற்று (3)
6.ஒயிலழகு எதிலாவது கண்யம் இருந்தால் எது கதி இல்லை (5)
7.காப்பியத்தில் துறவி; கனவுந் தினவும் சரிபாதி (4)
10.அதிகப்பிரசங்கி, சிங்கப்பூரில் இறங்கு (3)
11.முகத்தில் பொருட்செறிவு காட்டல் முடியாது (2)
12.புரிவதின் எதிரே பெரும்பாலும் பிழை (3)
13.காதை கேட்கையில் மெய்யில்லை கலங்கிய அரசி (3)
14.ஈட்டி மூலையில் ஒரு பறவை (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

807 poo maNakkum

811 muppaalarum

810 asaiva uNavu