thuppaRiyum puthir vidaikaL


துப்பறியும் புதிர் (விடைகள்) இந்த புதிரை 71 பேர் பார்த்திருக்கிறார்கள் 4 பேர் தான் விடை அனுப்பியுள்ளனர் . எனவே நான் கொடுத்த குறிப்புகள் போதுமானதாக இல்லை என்பதை உணர்கிறேன் . கலந்துகொண்டவர் அனைவர்க்கும் நன்றி குறுக்காக: 1.சர்ப்பம் தந்த சூழ்நிலை (7) சந்தர்ப்பம் 4.தாயோடிருந்த வடு (2) நாபி 5. பத்திரம் காலாவதி அதிலும் வன்முறை (6) பலாத்காரம் 8.சான்றுகளை ஆதரவாக்க வெட்டு (2) மால் இது நல்ல தமிழ் இல்லை மால் வெட்டுதல் என்றால் லஞ்சம் கொடுத்தல் 9.பலவிதத்தில் துஷ்பிரயோகம் (3) பதவி 12.புதுப்புளியிலும் தடயம் கிடைக்கும் (3) துப்பு 14.சிறை இரவு? உயிர் போனாலும் தலைமறையும் (4) சி றை இ ர வு - உயிர் (இ) =சிறைரவு ~ சிரவுறை (தலைமறைக்கும்) 15.நடுவிகந்தாம் ஆக்கம் சஞ்சலம் (4) நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே அழியவிடல் நடுவுநிலைமை விடுத்து வந்த செல்வம் ~ லஞ்சம் 16.நுகரும் கண்ணுக்கு கண் குரு டில்லை ;துல்லியம் (5) நு க ரு ம் க ண் ணு க் கு - கண் குரு =நு க ம் ணு க் ~ நுணுக்கம் (துல்லியம்) 17.முடியாத துப்பு சட்ட இயலுக்கடை (3) துப்பு = தடயம் ~ தடய (முடியாத தடயம்) தடைய இயல் ( forensic science) இயல் என்ற சொல்லுக்கு அடை மொழி தடைய நெடுக்காக 1..நம் கவசம் பல;அதில் பாதிக்கு மேல் நிகழ்வு (5) நம் கவசம் பல ~ சம்பவம் (நிகழ்வு) 2.இது போகும் பாதை புலனாய்வுக்கு வழிகாட்டி (3) பணம் 2 G, Bofors, போன்ற வழக்குகளில் பணம் போன பதை தான் தடையம் 3.அரசு வக்கீலுக்கு பிடித்த 3 எழுத்துக்கள் பிரிவு வாரியாய் (1,1,1) இ பி கோ 6.காறை வல்லதுதான் ; கருப்பாடுகளை நீக்கி சீர் செய்ய வேண்டும் (3,2) காவல் துறை 7. பெருங்கனி எதிர்வர ஆதாயம்? முடியாது (2) பெருங்கனி =பலா ; எதிர்வர லாப ம் 10.பத்தில் ஒன்றிடை இஞ்சி இடை அடைக்கலமாகு (5) தசம் + ஞ் (இஞ்சி இடை )~ தஞ்சம் , அடைக்கலமாகு = தஞ்சமாகு/ தஞ்சமடை 11.பல்லாயிரம் ஆண்டு செய்திகள் தாங்கும் இரட்டை சுருள் பரம எண்ணுக்குள் அடக்கம் (4) மரபணு (= DNA) this is in the form of a double helical molecular pattern and holds the hereditary records of thousands of years 13.நிலம் விட்டு இணை பிரியா உள் விஷயம் (3) நில புலம்/ நில புலன் புலன் = உள் விஷயம்

Comments

Popular posts from this blog

807 poo maNakkum

811 muppaalarum

810 asaiva uNavu