padiththavar

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................

படித்தவர்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பல்லவன் சற்று மாறி வந்தால்தான் விடியும் (5)
4.இது பழுக்கும் என்று கிளி ஏமாந்தது (3)
5.எதிர்வரும் உலகு (2)
6.பொருளற்ற சொல்லை பாவினின்று நகர்த்து (2)
9.தலையாயது விடுதலை .அது தப்பில் நுழைந்தால் திண்டாட்டம் (4)
11.இடைவிட்டு நன்மை செய் ;நெல்லும் கரும்பும் நிமிர்ந்து நிற்கும் (4)
13.'இவளுக்கே பசின்னாலும் தப்பு பண்ணக்கூடாது ' வள்ளுவர் (4)
14.ஆதிகெட்டு அழுவோர் முதலில் தொட்டுக் கும்பிடுவோர் (4)
15.கண்ணன் வண்ணப்பெயரெச்சம் (2)
17.விண்(2)
18.மாண்புற்றீர் உம்மிடை கடை வாசல் எறும்புகள் பறக்கும் (5)

நெடுக்காக:
1.பதர் இடையே கொஞ்சம் வண்டியை செலுத்தினார் படித்தவர் (5)
2.மகவு எதிர்வர நறுமணம் பாதி (2)
3.குதிரைக்கு அழகு, எழுத்துக்கு அலகு ,அரசுக்கு ஆதாரம் மக்களுக்கு சுமை (2)
4.புகழும் பாட்டும் ஒற்றுமை (2)
7.மிகச்சிறிய நாட்டின் அதிபருக்கு உலகெல்லாம் புகழ் (2)
8.மேடைப்பேச்சாளரின் பெண்கள் (3,3)
10.ஆப்பிளை மட்டுமா, அனைத்தயும் கவரும் (2,4)
11.வாலறிவன் அடி (4)
12.என் உள்ளே விழுமிய இடையே, புறப்படு (4)
16.மெய்யின்றி நீஞ்ச முடியாத அதமர் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

807 poo maNakkum

811 muppaalarum

810 asaiva uNavu