kizhindha vEtti answers


Ramachandran Vaidyanathan 10:31 பிற்பகல் (14 மணிநேரத்திற்கு முன்பு) பெறுநர்: ramav.nathan குறுக்காக:........................................................................................................................................ 1. .விரும்பி கிழிந்த வேட்டி கொள்ளும் போட்டியாளர்(5)வேட்டி கிழிந்ததால் வேட்; விரும்பி இதைக் கொண்ட போட்டியாளர் = வேட்பாளர் 3.தமிழில் மாறிய தலை கீழ் இந்தி (3) இந்தி யில் தலைகீழ் = உல்டா . என்ன காரணத்தாலோ சினிமா எழுத்தாளர்கள் இதை மாற்றி என்ற பொருளில் பயன் படுத்துகிறார்கள் 5.திருகு மான் (2) திருகு = screw thread= மரை = மான் 6.நேரமாகிவிட்ட ஊர் வின்ச் அழி வாலிபரின் பெயரை சேர்த்துக் கொண்டது (5) மணியாச்சி (நேரமான ஊர் )முன்னாள் கலெக்டர் விஞ்ச ஐ சுட்டுக்கொன்ற விடுதலை வீரர் வாஞ்சி நாதன் பெயரும் சேர்த்து வாஞ்சி மணியாச்சி என்று அழைக்கப் படுகிறது ~ 8.உள்ளூர அறிவது பயம் இன்றி பணம் உயர்வு என்பர் (4) பணம் உயர்வு-பயம் =ண உ ர் வு~ உணர்வு (உள்ளூர அறிவது) 9.முடியாத இரவல்ல பிரிக்க(2) இரவல்ல=பகல் ; முடியாவிட்டால் பக = பிரிக்க 10.இரண்டற சீர் வல்ல தகை நோன்பிருக்கும் நல்லவர் (5) சீர் வல்ல தகை ; 2 அற்றால் சீ ர் வ ல த ~ தவ சீலர் (நோன்பிருக்கும் நல்லவர் ) 13.முன் நின்று பொருள் கெடுக்கும் அடை அப்பத்தில் அடங்கும்(2) அப ( அப ஸ்வரம் , அப கீர்த்தி ) சொல்லின் முன்னாள் நின்று அதன் பொருளை கெடுக்கும் 14. புண்ணிய பூமி (3,3) புனித தேசம் நெடுக்காக:<.................................................................................................................................. 1.இன் இல் ஆல் ஓடு ஐ கு பிரிவு காட்டல் குறைந்த சினை (4,3) பிரிவு காட்டல்= வேற்றுமை ;சினை= உறுப்பு ; குறைந்த சினை= உறுபு ~உருபு 2.முடிவின்றி சேராமை (2) சேராமை = கூடாமை ; முடிவின்றி கூடா 3.பொருளாக அமைந்த பொருள் கடையின்றி வேள்வி (4)பொருளாக = உரையாக = உரை (பொருள் )+ யாக ( கடை இன்றி வேள்வி) 4.கடை போன வீண் முயற்சி உடலுழைப்பின் நீர் சிந்திய (5) வீண் முயற்சி = வியர்த்தம் , கடை போனதும் வியர்த்த ( உடல் உழைப்பின் நீர் சிந்திய ) 5.மணிமேகலை சென்ற நைனா தீவு நாபாவின் கதை (7) மணிபல்லவம் ( நா . பா.வின் சரித்திர நாவல் ) மணிமேகலை சென்ற அந்த தீவு இன்று நைனா தீவு என்று அழைக்கப் படுகிறது 7.சர்தார் பயணித்த கலம் கடித்துக் குதறும் (4,2) சிங் கப்பல் = சிங்கப் பல் 11.வருகை தந்தே வணங்குகிறேன் (3) வந்தே ( மாதரம், வாசு தேவம்)= வணங்குகிறேன் 12.வெப்பத்தை அடுத்தால் அறுதியிடும் சுய கெளரவம் உள்ளவர்(2) வெப்ப மானி வெப்பத்தை அறுதியிடும் ; மானி =சுய கெளரவம் உள்ளவர் ................................. புதிரை விடுவித்த , விடுவிக்க முயன்ற அனைவருக்கும் என் நன்றி

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu