200 milli answers


குறுக்காக: 3.இப்படிச் செய்தால் மிஞ்சுவர் சிலர் (5) கெஞ்சினால் மிஞ்சுவர் 5.பருவுக்கு தலையைக் கிள்ளி மையிட்டு கலந்தால் ஒளியே இருக்காது (5) பருவுக்கு தலையைக் கிள்ளி = ரு . + மையிட்டு = மையிருட்டு ( ஒளியே இருக்காது ) 7.(எனக்குப்) பிடித்தது பருப்பு. அதிலே உயிர்வளியோடிணைந்த (அயம்) (3,4) பிடித்தது பருப் பு ~ துருப்பிடித்த ( ஆக்சிஜன் இணைந்த அயம் (iron )) 8.விதிப்பவர் எதிர்கொள்ளும் ஆண்டு அறுபதில் ஒன்று (3) விதி ப் ப வ ர் ~ விபவ 10.வராகம் என்பது வனப்பு அன்றி வேறில்லை (4,3) வனப்பு அன்றி= வனப் பன்றி = காட்டுப் பன்றி = வராகம் 8ம் வகுப்பில் என் தமிழ் ஆசிரியர் ( சங்கர சாஸ்திரிகள் )சொல்வது நினைவுக்கு வருகிறது. உயிர் வரின் உ க்குரள் ( குற்றியலுகரம் ) மெய் விட்டு ஓடும் 12.சொற சொறப்பாக கைவிரலில் பட ஓசை குறைத்து குளிக்க (வேண்டும் ) (3) குளிக்க = நீராட . ஒலி குறைந்தால் நி ர ட 13.இந்த மரத்தடியில் லபோ திபோ என்று கத்தினால் ஞானம் வருமா, சொல்லிக்கொடு(2) போதி = சொல்லிக்கொடு 14.நல்ல காலம் வரும் பை (6) குடுகுடுப்பை 15.(வாங்கிய) மாதுளையில் பெரும் பகுதி ஓட்டை (2) துளை நெடுக்காக: 1.பாஞ்சாலம் குறிச்சியார் ஊரைத்துரந்தமையின் உள் நோக்கு என்ன ?(5) ஊமைத்துரை 2.மாருதி கிட்ட படபடப்பு பார்த்தால் ' இது களவாடிய (உருப்படியோ ) '(7) மாருதி கிட்ட படபட ப் பு ~ திருடப்பட்ட 3.பின்னுக்கு முன் படுகெட்டி. உள்ளே போனால் பயங்கர சட்ட திட்டம் (4) பின்னுக்கு முன்= பி , படுகெ ட் டி ~ கெடுபிடி 4.(துணி) தைத்த சிறுவன் கிட்ட துருவிக்கேட்டால் (சிலையை) முடமாகியவன் அகப்படுவான் (6) சிதைத்தவன் ( vandal ) 6.முன்னுக்குப் பின் கேட்டு ( அதே பதில்தான் ) (3) வினவி 9.10 கு காடுவிட்டு இடை நீக்கிச் சென்றது அபகரிக்கப் பட்டது (5) காட்டுப் பன்றி ,காடுவிட்டு இடை நீக்கி பறி . சென்றது= போனது . பறிபோனது 10.கிழங்கானால் ஆரஞ்சு, கல்லானால் 200 மில்லி, பொன்னானால் மாற்று (4) கா ரட்டு . 1 carat = 200 mg (வைரத்துக்கு). தங்கத்துக்கு x carat = 100 x / 24 % purity 11.பகரங்களில் சிக்கிய பாதி வடை ஆக்கலைக் குறிக்கும் (4) பாதி வடை= டை , ப டை ப் பு = ஆக்கல்

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu