குறுக்காக:
1.இங்கிருந்து பதம் கண்டால் பருந்து பறப்பது இனிமை ( 5) இங்கி ருந்து ப தம் - பருந்து ( பறந்தாச்சு)= இங்கிதம் =(இனிமை )
3.சறுக்கும் பாறையில் போர்வீரர் கூடாரம் (3) ச ருக்கும் பாறை ~ பா ச றை
5.ஜாலக்காரியிடம் நம் தலைக்கு அருகில் காலை வைத்து கிரிக்கெட் பார்க்கும் இடம் (3) ஜா ல க்கா ரி ~ காலரி
~
6.பலம் பொருந்தியவரை கீரையாய் மதி (4) வல்லாரை
7.இரட்டித்த அரை; தண்ணீர் பாய்ச்சணும் (3) அரை= பாதி ; இரட்டித்தால் பாத்தி
8.நயனம் விண்டது வான மில்லை (4) நயனம் = கண் + விண் டது - விண் ( வானமில்லை)~ கண்டது (= நயனம் விண்டது)
10.நாலறை உடலுறுப்பில் மூன்று மனதுக்கு சுகம் (3) 4 அறை உறுஊஉ= இதயம் ; அதில் 3 = இதம் ( மனதுக்கு சுகம் )
13.கால விரயம் எதிரில் எவையும் தள்ளிப் போகா (3) கா ல வி ர யம் எதிரில் விலகா
14.நாங்க இந்த நதியில் கல்கியின் கொடியவனைக் கண்டோம் (5) நா ங் க இந்த நதி யில் ~ நாகநந்தி ( சிவகாமியின் சபதத்தில் கொடிய பிக்ஷு)
15.பொட்டிழந்து வால் போய் சகுந்தலையின் தந்தை 'என் மணாளனே' (3) கண்வர் -பொட்டு -வால் = க ண வ = கணவரே
16.வட பெண்ணை பக்கம் பெண் படம் இல்லை ; பேச்சு மட்டும் சக்கரவட்டம் (4) வட பெண்ணை பக்கம் - பெண் படம்= வ ணை க் க ~ வக்கணை (= சக்கர வட்டமான பேச்சு )
17.ராசியான ஸ்வரம் (4) ரிஷபம் (=ரி)
நெடுக்காக:
1.ஒண்ணு விட்ட சவம் இல்ல ,அதப் புரட்டிப் போட்டா காசு வேண்டம் (5) சவம் இல்ல -ல் (ஒண்ணு விட்ட)= ச வம் இல~ (புரட்டிப்போட்டால்) இலவசம்
2.வடக்கே ஆட்டக் காரன்; தெற்கே இச்ச இல்லா கிச்சடி இல்லா கலக்கும் திறமைசாலி (4) இந்தியில் ஆட்டக்காரன் = கிலாடி ; கிச்சடி இல்லா=இச்ச( இல்லா )= கி டி ல் லா ~கில்லாடி
3.வாராவதியிடை இசைக்க சிறார் படிப்பு (5) வாராவதி= பாலம் ; இசைக்க= பாட. பால பாடம்
4.ஊட்டத்துள் பாதி வாரி மெல்ல சாய்த்து (4) ஓட்டம் = சத்து ;பாதி வாரி = ரி ; சரித்து (= மெல்ல சாய்த்து)
8.சாட்டை (2) கசை
9.வியந்திருந்தோம் ; உள்ளே மராட்டிய மலை! (5) விந்தியம்
10.மெய்யற்ற இல்லம் கிடையாது (2) இல்லம் -ல்-ம் = இல (கிடையாது)
11.எதிர்ப்படும் காதணி சரியில்லை (2) தகா (=சரியில்லை)
12. வதனத்தில் கோடு விலாசம் (4) வதனம்= முகம் ; கோடு = வரி ; முகவரி
13.வன விலங்கு திரும்பிக் கேட்க (3) வ ன வி லங்கு திரும்பினால் வினவ (கேட்க)
14.மண நாள் எதிரில் வெள்குற (2) ம ண நா ள் ~ நா ண ( வெள்குற )
15.கண்ணை இடைவிட்ட சரம் (2) கணை (=சரம்)
பதிலளி, எல்லோருக்கும் பதிலளி அல்லது முன்னனுப்பு செய்ய இங்கு கிளிக் செய்க
Comments
Post a Comment