vada mERkae
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................
வட மேற்கே
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthir
This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.
|
குறுக்காக: 1.மேலயா, கீழயா, காலைலயா,மாலைலயா; எதுவுமில்ல,வட மேற்கே (4)
3.நளவெண்பா இல்லை. அதே கதை அதி வீர மன்னரால் (4)
5.கணிகையர் தயவா,அதில் வெப்பம் குறையவா?(4)
6.பால்கு நதியில் அமைந்த புத்த,சமண,சைவ தலம் (2)
7.இந்திய மக்களவையின் தேனடுத்த சொல்லாளர் புகழை சொல்லி மாயேன் (3)
10.கைகொண்ட இடையினக் குறில் பெரிய எண்ணும் ஆகும் (4)
11.நீர் வேட்கையை அழுத்திச் சொன்னதன் விளைவு (4)
14.உலைந்த சங்கிலி கயவர் வசம் (5)
15.சுருங்கி விரிந்த அம்பாசமுத்திரத்தில் தேவ மாது (4)
16.வலம்புரியார் கண் திரும்பிய கவிஞர் (4)
நெடுக்காக: 1.தவில் செய்வார் பண் இரண்டொடு பத்தேழு (6)
2.தவம் வியாகுலம் கலந்த கண்ணன் பரம்பரை (3,3)
3.இற்றுப் போக (2)
4.வாலி கண்ட அடயாள பட்டையர் ஆட்சியாளர் நந்தி (3)
8.துப்பாக்கி குழலினின்று அதிகாரம் தோன்று மா? (2)
9.இரப்போர் கசட்டினை நேர் செய்து காப்பவர் (6)
12.பெருநிலப் பகுதியில் இறைச்சித் துண்டு ஒரு ஆபத்து (4)
13.இமயம் போல் புவி மீது உண்டோ ,ஆராய்ந்து உரை (4)
| ||||||
உயிர் | a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ| |
மெய் | k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்| |
உயிர்மெய் (மாதிரி) | ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்| |
ஆய்தம் | H : ஃ |
நகல் அனுப்புக
Comments
Post a Comment