kalai manjcham vidaikaL


குறுக்காக: 1.கலை மஞ்சம் சுமக்கும் இரும்புக் கனி வரைக்கு வள்ளல் தன்மை குறைவோ? (5) கஞ்சமலை (சேலம் அருகே உள்ளது )காஞ்சன மலை என்ற பெயர் மருவி வந்ததென்று சிலர் கூறுகிறார்கள் 3.விரகத்தால் விளையும் கீரை (3) பசலை (கீரை ) 5.ஐயகோ, நாசம் ; பைங்கிளியே, போர் தடுக்க முதன் முதலாய் உலக மன்றம் தேர் (1,1,2) ஐ நாச பை 8.வாய் சொன்ன முன்னுரை தோற்று விடுமா?(5) தோற்றுவாய் 11.உதை கடந்து, நிலை குலைந்து குற்றத்துக்குத் துணை (4) உடந்தை 13.ஆயர் வசம் புரையோடி உள்ளே வரலாற்றுக் கதா பாத்திரம் (7) சம்புவரையர் நெடுக்காக: 1.உள்ளம் கணித்தோ உலைந்த திருட்டுக் கலன் (4,2) கள்ளத்தோணி 2.நண்பன் காச நோய்க் கெதிரி (2) சகா 3.அரிகர சுதனின் அடியவர் அடிப்பொடி அலம்பலில் அழுக்காகும் ஆறு (3) பம்பை (ஆறு) 4.தலை கீழ் நிற்கும் பிள்ளை தம்பிப் பாப்பாவோடு முதல் பிறந்த நாள் காணும் (3) செவலை(அடுத்த குழந்தை போதிய இடைவெளிக்கு முன் பிறந்து விட்டால் முதல் குழந்தை செவலை என்று சொல்வார்கள் . என் வீட்டில் இந்த பிரச்சினையே இல்லை. முதல் மகன் இருக்குமிடம் ஓஹையோ. இரண்டாவது மகன் காலிபோர்னியா) 6.நாட்டாண்மை முதலில் வாய் மொழிந்தால் நீர் கடக்க ஆறுண்டு (3) நாவாய் (=ஓடம்);ஆறு= வழி 7.கை இருப்பு மாறுபட்டால் தேடி வரும் செறுக்கு (5) இறுமாப்பு 9.பெண்டிர் நின்று வாட, தானமர்வோரை நேர் செய்த பெண்டிர் (4) மடவார் (=பெண்டிர்) 10.பொருப்புள்ளதை அகழ்ந்து வெளிக் கொணர் (2,3) புதை பொருள் 12.முதலெழுத்து கடவுள் வரை கலந்தது (3) முதலெழுத்து (=first draft)= வரைவு 13.எப்போதும் உம்மையே மெய் மறந்து எதிர் நோக்கும் தாசன் (2) சதா விடைகள் அனுப்பிய ஆர்வலர்கள் Subramanyam V. Narayanan Ramiah Narayanan Ramiah இன் சுயவிவரப் புகைப்படம் narayanan.ramiah@gmail.com Shanthi Narayanan ssvkn04@gmail.com முத்துசுப்ரமண்யம் Smt Soudhamini Subramanyam ராமராவ்

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu