குறுக்காக:
1.காகம் ஒப்ப சீரமை; குழந்தைகளை கவனி (5) கா க ம் ஒ ப் ப இதை சீரமைத்தால் காப்பகம் ; குழந்தைகளை கவனிக்கலாம்
4.ஈ வந்து மெய் விட்டால் விலக்க வேண்டாம் (3) ஈ வ ந் து ; இது மெய் விட்டால் ஈவது ;
( ஈவது விலக்கேல் )
6.மந்தரை இடை வேண்டா,வேண்டா நெடில் வேண்டா;பாரதி அமரும் மலர் (5) மந்தரை இடை வேண்டா மென்பதால் ம ரை; வேண்டா நெடில் வேண்டாமென்பதால் வெண்டா. வெண்டாமரை = வெண் தாமரை ;கலை மகள் (பாரதி) அமர்வது .
7.மாங்குடியின் தென் பகுதி இல்லையடி; நாட்டுப் பாடல் (5) தென் மாங்குடி இல்லைய டி ; தெம்மாங்கு
9.முடியாத கேரள நடனம் தவறு;இதமான வெப்பம் உண்டு (6)கதகளி முடியாததால் கதக + தப்பு (தவறு) =கதகதப்பு (இதமான வெப்பம் )
11.கொடிபோல் துவங்கும் பலமான ஜாதி( 5) பலமான ஜாதி =வல்லினம் ; வல்லி =கொடி
12.என்ன புகையோ ஓசையில்லா சிரிப்போ (5) என்ன புகையோ ~புன்னகையோ (=ஓசையில்லா சிரிப்போ)
14.யேசுவின் ஒரு சீடர் வரி வசூலித்தவர்; அவர் புகழ் தேயுமா?(3) saint mathew (மாதேயு) வரிவசூல் செய்தவர் . ஏசுவின் சீடர் .வரி வசூல் என்றால் ஏழைகளை துன்புறுத்தி. " இந்த பாவியை சீடனாய் கொண்டுள்ளீர்களே' என்று சிலர் கேட்டதற்கு "பாவிகளை மன்னிப்பதே என் கொள்கை ' என்றாராம் ஏசு .
16.பந்தய மாட்டு வண்டி (3) ரேக்ளா
18.விடு முன் எல்லை மீறிய இளங்காளை புரியாத ஒன்று (4) எல்லை மீறிய இளங்காளை =ளங்கா ;
வி டு முன் = வி ; விளங்கா=புரியாத ஒன்று
19.இந்த ஈஸ்வரி பாடுவதில்லை; ஆயுதம் தாங்கிய சக்தி (5) ஆய்தம் தாங்கிய சக்தி= காளி ; காளீஸ்வரி
20.செலவென்ப மற்றும்வரவென்ப இவ்விரண்டின் அளவென்ப வைப்பேன் எழுதி (5) கணக்கர்/ கணக்கன்
23.பெண்டாட்டி திடம் ;உள்ளே ஐயா பாடு தவிப்பு (6) திண்டாட்டம்
24.கால் எது கை எதுன்னு தெரியாம என்ன பாட்டு எழுதறது? (3) எதுகை
நெடுக்காக:
1.பரி உண்டு அசையா கரி உண்டு ஆளுயர வாளுண்டு அரைப்பனை போல் வேலுண்டு அதற்கொத்த உருவோடு ஊர்காக்கும் தே (3,4) காவல் தெய்வம்
2.பயணப்படியோடு பணிமாற்று; அதற்குள் பணம் போதுமா? (4) பற்றுமா ( ப ணி மா ற்று)
3.தட்டுத் தடுமாறி மாமனை அணுகல் டிக்கற்ற பெட்டிக்கே கண் எனக் கொள் (2,3) பெண் கேட்க
4.கோவலன் கூற்றில் புகார் முதல் மதுரை வரை பத்து காதம் (3,3) கோவலன் திருந்தி வந்து கண்ணகியுடன் மதுரை செல்கிறான் கால் நடையாக .நடந்தே பழக்கமில்லாத கண்ணகி கொஞ்ச தூரம் நடந்ததுமே மதுரை இன்னும் எவ்வளவு தொலை என வினவ , அவளை அச்சுறுத்த விரும்பாத கோவலன் 10 காதம் என்பதற்குப்பதில் ஈரைங்காதம் என்கிறான் .(சிலப்பதிகாரத்தில் வருவது ஆறைங்காதம் என திரு எஸ் பி சுட்டிக் காட்டியுள்ளார். அதன் படி புதிரை மாற்றி அமைத்துள்ளேன்)
5.பாக்கு சுவை ஆறில் ஒன்று (5) துவர்ப்பு
8.குழந்தை பாதி,அழும்பு பாதி; தெளிவை இழ (4) குழம்பு ( தெளிவை இழ)
10.பின்பிறந்தவளை முன்னிட்டு காக்கை தங்க இடம் மாற்று (6) தங்கைக்காக
13.திரிகடுகத்தில்விருந்திருக்க உண்ணாதான் பயிரிடுவான் (4) வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் ( திரிகடுகம்)/ வேளாளர்
15.லண்டன் பாலம் விழுந்தால் இதில் மூழ்கும் (3,2) தேம்ஸ் நதி யில்
17.கிரானைட் கொள்ளையருக்கு அப்படி ஒன்றும் உதவி இல்லை (4) சகாயம் (உதவி ) மேலூர் பகுதியில் நடந்த இந்த பகல் கொள்ளையை துருவி துருவி விசாரித்துக்கொண்டிருக்கிறார் .
18.வங்கத்தின் நீரின்மிகை இங்கே ;குள்ளநரி கடைகள் விடா உள்ளே (4) கங்கை பிரும்மபுத்திரா வின் நீர் வங்காள விரிகுடா வில் ( விழுகின்றது ); வி டா உள்ளே கு ரி
21.மெய்யற கண்டித்து விரைவாக (செல்) (3)கண் டி த் து ; மெய்கள் போனால் கடிது (=விரைவாக)
22.நிலையான முடித்திட முடிவில் (2)முடித்திட முடிவில் திட (நிலையான ) ( திட சித்தம் )
விடை அனுப்பியோர்
திருவாளர்கள் மாதவ், ராமையா, ராமராவ், நாகராஜன் ,கோவிந்த்
திருமதி சாந்தி
யாரையேனும் விட்டு விட்டேனோ!
Comments
Post a Comment