kaaval deivam,kalakkezhuththu
அசோகன் தன மனைவி சுமதியை பஸ்ஸில் ஏற்றி விட்டு நடந்து வந்து கொண்டிருந்தான் . நடை பாதையின் வலப்புறம் பொகைன்வில்லா படர்ந்த சுவர்.-----------------------------------------------------------------------------------'நில்' என்று ஒரு குரல் . அசோகன் சுற்று முற்றும் பார்த்தான். யாரும் தென்படவில்லை . அவன் நின்று கொண்டிருக்கும்போதே சுவர் சாய்ந்து நடை பாதையின் மேல் விழுந்தது. அசோகனுக்கு திகைப்பு. ஆச்சரியம் .---------------------------------------------------------------------------------------------------------- சிலநாட்களில் அவன் அதனை மறந்துவிட்டான் . அன்று ஆபீஸ் செல்ல நேரமாகிவிட்டது. அவனுடைய பஸ் இன்னும் வரவில்லை. சொல்லி வைத்தது போல கிஷோர் தனது பைக்கில் வந்து நின்றான் . ' ஏறிக்கோ ,போகலாம்'------------------------------------------------------------------------------------------------- 'போகாதே ' என்று ஒரு குரல் கேட்டது.. அசோகன் சற்றே குழப்பமடைந்தான் . ' கிஷோர் நீ போ ,நான் பஸ்ஸில் வரேன் ' என்றான் . இரண்டே நிமிஷத்தில் பஸ் வந்தது. பஸ் ஆபீஸ் அருகே மேலே போகமுடியாமல...