thaeyaadha alaikaL . answers


குறுக்காக: 1.தென் மேற்கிலிருந்தும் வரும் வடகிழக்கிலிருந்தும் கொட்டும் (3,2) பருவ மழை 5.உச்சிமுதல் பாதம் வரை தேடுவதே நல்லது (4) உசிதம் 6.அமிர்தஸரஸுக்கு இணையாய் வேலூரில் கனக மயம் (5) பொற்போயில் 7.சோதி பிறக்க அதில் ஒளிற(4) சோபிக்க 9.அடை (2) திணி 10.கரம் அங்கே மேடை இங்கே (5) அரங்கம் 13.(ஆரண்ய) காண்டம் முதலில் பார் (2) காண் 14.வலை கண்ட முதல் சஞ்சலம் (3) கவலை 16.வலது காதே என் உள் உறை எமன் (2,3) கால தேவன் 17.தியாகிகளின் புகழ் பின்னால் வரும் (3) கியாதி 18. வலப்புறம் துவங்கி உள்ளதா என்று நோக்குக (3) தேடுக நெடுக்காக: 1.சூப்பர் மார்கெட் பொங்காமல் படி அருள் தேடுக (2,3,4) பல் பொருள் அங்காடி 2.சிலம்பில் வைக்கும் மாமணி இங்கு பிறக்குமோ (4) மலையிடைப் பிறவா மாமணி என்கோ என்று கோவலன் கண்ணகியைப் பாராட்டிப் பாடுகிறான் . ( இது திரைப்படத்திலும் உண்டு ) 3.ஊசி வேண்டாம் மாத்திரை வேண்டாம் உண்ணக்கொடுத்தால் போகும் இந்நோய் (5) பசிப்பிணி 4.கம்பி தந்தவளே, அண்ணன் அழைக்கிறான், வந்த (சோடு) தெரியவில்லை (5) தம்பி களே 7.சோகத்திலும் தோன்றும் ஒளி (2) சோதி 8.சில பேருந்துகளில் உறக்கம் விலக்க அறிவுரை (4) தூங்காதே ( இது நான் சற்று கோபத்தில் எழுதிய குறிப்பு. அதென்ன பிரயாணிகளை மரியாதையில்லாமல் குறிப்பிடுவது?) 11.மேனகை மகவை கண்டெடுத்தவர் (4) கண்வர் மகவு தான் சகுந்தலை 12.காதலை தேடித் திரியும் நண்பனுக்கு தேயாத அலையில் அறிவுரை(4) அலையாதே . இந்த அறிவுரை இனி எடுபடாது . மகனுக்குப் பெண் தேடி பெற்றோர் களே மகன் தான் பெண் பார்த்துக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் 15.தலையில் என்ன வடு கிடு இருக்கா? இல்லை, முடிதான் பிரிந்தது (3) வகிடு

Comments

Popular posts from this blog

812 iruL vilakum

811 muppaalarum

810 asaiva uNavu