குறுக்காக:
1.பைரவதாஸ் கொடுத்ததில் கர்ணத்தை அறுதியிட்ட கணித மேதை (6) பைதாகொரஸ் . இவர் பைதாகரஸ் தான் என்கிறார் திரு பா சா
3.அரசாண்டவர் கையில் அளவுகோல் (2) சாண் எந்த மன்னன் என்று தெரியவில்லை . அவரது வலத் தோளிலிருந்து நீட்டிய இடக்கை விரல் நுனி வரை உள்ள அளவு ஒரு கெஜம் என நிர்ணயித்தார்.
4.கர்ணத்தில் தொங்கும் தோல் (2) தோடு அல்லது தொலி என்பது தோல் என அறியப்படுவது தென் மாவட்டங்களில்
5.எடைக்கு எடை ராசியான கம்பு (5) துலாக் கோல் துலா ராசி ; கோல் =கம்பு
8.விழுவனவும் கேள் வழுவல்ல மெய்யுமல்ல (3) வினவு = கேள் ; விழுவனவும் - வழு-ம்
9.ஈரிரண்டு விழியன் சேய் உண்டபின் மறைவான் (2,4) நாலு கண்ணன் வந்தால் தான் சில குழந்தைகள் சோறுண்ணும் . சாப்பிட்டு முடித்தவுடன் நாலு கண்ணன் இருக்க மாட்டான் .( இது பழங்காலக் கதை )
10.மஞ்சம் அரை அரை ஈட்டு (4) மஞ்சம் அரை= சம்; அரை= பாதி . சம்பாதி = ஈட்டு
15.சிலமாத கடைசிக்கோடு கட்டுவது கஷ்டம் தான் (2) வரி
16.மூடரில் வாங்கி வாரிட வாரா பெரும்புல் ( 4) மூடரில் வாங்கி-வாரிட= மூ ல் ங் கி ~ மூங்கில் . தாவர இயலார் இதனை புல் என்பர்
17.புல்லைக் கையில் எடுத்து உண்டும் ,உயிர்த்தும், எரித்தும் இடர்ப் படலாம் (4) புகையிலை ( இதனை உண்டு இடர்ப் பட்டவர் என் தந்தை)
நெடுக்காக:
1 பையில் இரை வைக்கும் புள் பெரும்பாலும் மூணுக்கு நாலரையில் அடங்கும் (1,3,2) பை மூக்கு நாரை (ஃ ப்ளாமிங்கோ )
2.பேரரக்கனை வீழ்த்தியவன் வீயிடையிட்ட பஞ்ச வருஷம் (3) பஞ்ச வருஷம் = தாது . வீ இடையிட்டால் தாவீது(டேவிட், கோலியாத்தை வீழ்த்தியவன்)
3.சாஞ்சாடு பின் மோதி மிதித்திடு (2) சாஞ்சாடு
4.வில்லானதோ அதில் வெற்றிக்கு மாற்று (3) வில்லானதோ ~ தோல்வி
6.ஒயிலழகு எதிலாவது கண்யம் இருந்தால் எது கதி இல்லை (5) எதிலாவது கண்யம் - எது கதி =லா வ ண் ய ம்
7.காப்பியத்தில் துறவி; கனவுந் தினவும் சரிபாதி (4) க ன வு ந் தினவும் ~ கவுந்தி அடிகள்
10.அதிகப்பிரசங்கி, சிங்கப்பூரில் இறங்கு (3) சங்கி ( விமான நிலையம் , சிங்கப்பூர்). " சாங்கி என்பதே சரி ' திரு பார்த்த சாரதி
11.முகத்தில் பொருட்செறிவு காட்டல் முடியாது (2) பாவம் முடியாமல் பாவ
12.புரிவதின் எதிரே பெரும்பாலும் பிழை (3) பு ரி வ தி ன் ; திரிபு = பிழை
13.காதை கேட்கையில் மெய்யில்லை கலங்கிய அரசி (3) கைகேயி இவள் கலங்காமல் இருந்திருந்தால் ஒரு காப்பியமே பிறந்திருக்காது
14.ஈட்டி மூலையில் ஒரு பறவை (2) ஈமூ
விடையளித்தோர்
திருமதியர் சாந்தி , சுப்பிரமணியம்
திருவாளர்கள் ராமராவ், சுரேஷ், நாகராஜன் ,முத்து, மாதவ், பார்த்தசாரதி ,சந்தானம்
பெயர் விடுபட்டோர் தயை கூர்ந்து எனக்கு எழுதுங்கள்
பங்கேற்ற அனைவருக்கும் நன்றி பல
Comments
Post a Comment