Answers, explanations, list of participants in KOOTHTHAANDAVAR


குறுக்காக: 1.ஜபசாதனையாய் மாறியதில் பாபாநாம சங்கீர்தனம்(2,3) சாய் பஜனை 3.கூத்தாண்டவர் இடையே மறைந்த கவிஞர் (3) தாகூர் 6.உறக்கத்தை சுமையாக எண்ணி தலைகளை மறந்து தூங்கா செளமித்ரி (5) கண்ணிமையா ( இந்த குறிப்பு அவ்வளவாக திரு முத்துவுக்கு ஏற்புடையதாய் இல்லை . நானும் ஏற்றுக் கொள்கிறேன் ). சௌமித்ரி = இலக்குவன் . வனவாசத்தில் அவன் கஂண்ணிமையாது அண்ணன் அண்ணியைக் காத்ததாக கம்பர் உரைக்கிறார்) 7.தலை விட்ட பாசம் மாலை துட்டரை அழித்தல் (5) சம்ஹாரம் ,சம்காரம் 8.வாதிக்கப் போகாமல் அதில் கற்பிக்கட்டுமா(5) போதிக்கவா 10.ஈரக்கால் ஒற்றமுடியாமல் தலையெழுத்து புரண்டது; ஊழ்வலிதான் மாதே (4) விதியடி 12.சோம்பல் செத்திடு சீராய் மடக்கு (2) மடி = சோம்பல் = செத்திடு 13.தியாகமாவது? அதில் அடிசறுக்கிய ஆனை சின்னத்தவர் (4) மாயாவதி 15.சன்னமான மல்லியத்தில் கொம்பு முளைத்தது வால் போச்சு (4) மல்லியத்தில் வால் போக மல்லிய . இதில் கொம்பு முளைக்க மெல்லிய 16.காலையூன்றிய சோர்வில் நந்தவன கிராமம்; கதைகளில் வரும் (4) சோலையூர் நெடுக்காக: 1.மொத்தப் பொருள் சுருக்கமாய் நீண்டு கலைந்த சம்சாரம் (5) சம்சாரம் நீண்டால் சாம்சாரம் . கலைந்தால் சாராம்சம் 2.நடனமாடினால் குறைந்த ஜாதி ( 2) ஜாதி குறைந்தால் ஜதி . இது நடனத்துக்கு தேவை 4.தீட்டப்பட்டதாக யாவர்கண் மைக்கூடு; வண்டுக் கிடமின்றி (5) யாவர்கண் மைக்கூடு - வண்டுக் = கூர்மையாக 5.கமல் படத்தால் காண்போருக்கு துக்கம், ஒரிசாவுக்கும் துயரம் (4) மகாநதி ( முதலில் பிகாருக்கு என இருந்தது. திரு எஸ் பி சுட்டிக்காட்டினார் ) 6.நல்ல பருத்தி வாங்க கடியாரம் போகும்; ரகு(வு)ம் போவான் (5) கடியாரம் போகும் - ரகும் = கடியாம்போ ~ கம்போடியா 9.முதலிலேயே மாறிவிட்ட அண்ணன் தங்கை காவியம் கமகமப்பூ (2,3) வா(பா)ச மலர் 10.காலையில் சுருங்கி கலங்கும் வில்லியடி (4) விடியல் = காலை 11.லயமாலயமா மாலயல்ல தர்மராஜன் ஊருக்கு முடிவில்ல (4) லயமா லயமா- மால ~ யமாலய ம் ( முடிவில்ல) 14.வலைத்தளத்தில் ஒரு துளி (3) திவலை விடையளித்து என்னை ஊக்குவித்தோர் திருமதியர் சாந்தி, சுப்பிரமணியம் திருவாளர்கள் நாகராஜன், ராமையா, சுப்பிரமணியம், சுரேஷ், ராமராவ், சந்தானம் முத்து சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி -- anbudan Vaidyanathan

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu