virundhaaLi answers, comments


விடைகள் குறுக்காக: 1.பித்தானை அழுத்தினால் விளக்கெரியாதா? அரசு மாறும் (2,3) மின் வெட்டு 3.காகிதத்தில் உள்ள தலைமைக் காவலர் (3) ஏட்டு (படிப்பு) 4.நீண்ட இளம் தாவரம் பணிப்பெண் (2) செடி நீண்டால் சேடி 5.திட்டாத செய்யேன் முடியாது வேல் முருகையா(5) திட்டாத= வையா ;செய்யேன் =புரியேன் , முடியாமல் புரியே ' இன்னும் பாராமுகம் ஏனோ' பாட்டு வரிகள் வையாபுரியே, வேல்முருகையா 7.ஜடாயு உறவினை ஈட்டு (4) சம்பாதி ( ஜடாயுவின் அண்ணன் ) 9.அன்பே, சுறாவே (உனை) தேர்ந்து உரைப்பேன் (4) அன்பே சுறாவே ~ பேசுவேன் =உரைப்பேன் 10.கசப்பில் மறைந்து கூடவே உள்ள (2) சக 12.கூப்பிடாத (விருந்தாளி) . அது கோழையாய் பதுங்கி இருக்கும் (3) அது கோழையாய் உள்ளே பதுங்கி உள்ளது அ ழை யா 14.உயிரின்றி அகத்தி (மாலை) தரித்து (வர) மெய் சிலிர்க்கும் ; அதிர்ந்தால் அதி வேகம் (3,2) அகத்தி தரித்து -அ -ன் -த் ~ துரித கதி 15.விரும்பி விதி மாற்று, பின் புறம் பார்த்து(4) திரும்பி நெடுக்காக: 1.குண்டு குழியில் ஒயிலாய் அசைந்து செல்லும் பெரிய பயணி ஊர்தி (4,4) மிதவைப் பேருந்து 2.ஏழு நிறம் கலந்து பறக்கும் சமாதானச் சின்னமே (2,3) ஏழு நிறம் கலந்தது வெள்ளை . வெண் புறாவே 3.வெள்ளத்தால் அட்டைக்குப் பொருள் தராப் பொறி சுருக்கம் (1,1,2) ஏ டி எம் 6.பயத்தால் வேகம் அதிர்வுற்று (2,4) வேகம் = கதி ; கதி கலங்கி 7.கண்ணனின் சார்ங்கம் உதைத்த அம்பு மாரி (2,2) ..சார்ங்கம் உதைத்த சர மழை போல் . திருப்பாவை 8.நிறைவேறா தாயன்பு கயிறாக எமனிடத்தில் (2) பாச ம் 11.பிரம்மனை பிடித்த துன்பம் (3) வேதனை வேதன் = பிரும்மன் 12.எதிர்பாரா விருந்தாளி (3) அதிதி 13.அக நாநூற்று அன்னையும் (அன்னையும்) (3) யாயும் யாயும் விடையளித்து ஊக்கம் கொடுத்தோர் திருவாளர்கள் சந்தானம் ,முத்து, ராமராவ், ராமையா , சுரேஷ் (இவ்வளவு பேர்தானா?) விமரிசனங்கள் 1 திரு முத்து விமரிசனங்கள் படைத்தவனை வேதனிக்குள்ளாஆக்கி, பழ்னியாண்டானைத் திட்டாமல் திட்டி .... 2 திரு சு ரேஷ் பாராட்டுகள் திரு சுரேஷ் இந்த கடினமான புதிரில் பெரும்பாலும் சரியான விடைகள். அதிதி என்பது விருந்தாளி. அதிலும் எதிபாரா விருந்தாளி ( துர்வாசரெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் தான் வருவார்களாம். அப்போது போன் வசதி அவ்வளவாக இல்லை) திதி என்றால் நாள் . அ திதி என்றால் நாள் குறிக்காமல் (வேலை கேட்ட வேளையில்) வருதல் . எனவே 14 சற்று மாறும் கதி = speed, rate, pace வேதன் = பிரும்மாவின் இன்னொரு பெயர் திரு சந்தானம் A tough one. Not sure about many answers.. பாட்டில் பெண் புறாவே என்றுதான் வருகிறதோ? நான் வெண் புறாவுக்கு வலை வீசினேன் . 'பெ ' யினால் பல விடைகள் தவறாகிவிட்டன தேவையான மாற்றம் செய்ய முயல்கிறேன் திரு ராமையா 1.குறு விடை சரியா? அரசு மாறுவதற்கும் மின்வெட்டுக்கும் என்ன சம்பந்தம்? 1.நெ விடை சந்தேகமாயிருக்கிறது. 11.நெ விடை தெரியவில்லை wish you a merry christmas happy new year 201 1. வசந்த முல்லையில் கொஞ்சம் சிக்கிக் கொண்டேன் வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண் புறாவே என்று வருவதாக ( தவறாய்) எண்ணி அதற்கான குறிப்பைக் கொடுத்திருந்தேன் திரு சந்தானம் தன் விடையில் பெண் புறா என சரியாய் குறிப்பிட்டு அதனால் மின் வெட்டு வராமல் திண்டாடியிருந்தார் பிறகு பிளாக்கில் வெண் புறாவுக்கான குறிப்பை நுழைத்தேன் 2 சர மழைக்கு சற்று பின்புலம் உள்ளது திருப்பாவையில் நான்காவது பாட்டு என்னை குடைந்துகொண்டே இருக்கும் ( என் கருத்துப்படி) ஆண்டாள் கண்ணனை உலகம் உய்விக்கும் மழையாய் உரூவகம் செய்கிறாள் . முன்னப் பின்ன மழையாய் இருந்து கண்ணனுக்கு பழக்க மில்லை இல்லையா! அதனால் எப்படி கடலுக்குப் போய் தண்ணீர் முகந்து மேகமாய் வர வேண்டும் எப்படி அப்போது ஊழி முதல்வன் போல் கருப்பாக இருக்கவேண்டும் எப்படி வெண்மையாய் ( பத்மநாபன் கையிலுள்ள சங்கு போல் ) மின்ன வேண்டும் எப்படி வலம்புரிச் சங்கு போல் அதிர்ந்து இடி இடிக்க வேண்டும் , சார்ங்கம் உதைத்த சரம் போல மழை பொழியவேண்டும் என்று step by step instructions கொடுக்கிறாள் . அணி இலக்கணத்தில் இது என்ன அணி என இன்னும் நிர்ணயிக்கப்படவில்லையோ! திருப்பாவைக்குப் பின் தொல்காப்பியமும் நன்நூலும் தோன்றியிருந்தால் இதற்கு மாற்று உவமையணி என்று பெயர் சூடி இருப்பார்களோ? ( reverse simile)

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu