thiththippathu: answers,acknowledgements


குறுக்காக: 1.மூன்றாம் உலகப் போரில் சுருக்கமாய்(ஆங்கிலத்தில்) ஒரு தரப்பு? ((1,2)X2) ஐ எஸ் ஐ எஸ் . இதன் பயங்கரவாதச் செயலால் ரஷ்யாவும் நாட்டோ நாடுகளும் அதற்கெதிராகப் போரிடுகின்றன .. ' இது மூன்றாம் உலகப் போர்' என சில வல்லரசுகள் உரைத்தன ." இம்மாதிரி குறிப்புகளை தவிர்த்தல் நல்லது", திரு ராமராவ் . 4.பின்னத்துக்கு மேல் குத்திவிடு ;உள்ளே தெரியும் (3) விகுதி/பகுதி ஒரு பின்னத்தின் இரு பகுதிகள் . மேலே உள்ளது விகுதி ( என்று நினைக்கிறேன்) 5.இல்லாததை இருப்பதாய் எழுதும் திறன் பகற் கனாவில் தொடங்கும் (4,3) கற்பனா சக்தி 6.இரைப்பை அமிலத்தின் கொடுமை கோரமில்லை? (4,2) அகோரப் பசி ( கோரமில்லை என்பதால்) 9.பேச்சு வழக்கு சாவியின் முன் பற்று விடல் (3) திறவுகோல் பேச்சுவழக்கில் துறவு கோல் , தொறவுகோல் 10.பணி தொடர்பான வல்லுனர் அஞ்சாது அடக்கும் (4,2) அலுவல் சார் = பணி தொடர்பான 12.பெண்; அவளை அவமதிக்காவிட்டால் முத்துக்கனி (3) அவளை - அவ = ளை . பெண்=மாது . மாதுளை 13.தராதரத்தைக் கடந்து தவறி மீன் குதிக்கும் உள்ளே (5,2) தவறி மீன் குதிக்கும் ~ தகுதிக்கு மீறி நெடுக்காக: 1.இரண்டரை ஜோடிக் கையன் ஒண்ணரைக்கண்ணன் பையன் (5) ஒண்ணரை கண்ணன் = சிவன் ;மன்னிக்கவும் ; இந்த அதிகப் பிரசங்கித்தனம் என்னுடையது இல்லை. காள மேகப் புலவருடையது . சிவனுடைய 3 கண்களில் பாதி உமைக்கு உரியது. ஐங்கரன் 2.வாளேந்திய ஐயரும் கோனாரும் வில்லொடு எல்லையில் ஆலயம் (தொழுவர்)(4,3) ஐயனார் கோவில் 3.பாரதி பாப்பாவிடம் இல்லையென்றது போகவே இல்லை (4) ஜாதிகள் இல்லையடி பாப்பா 4.பதவி தித்திப்பது (ஏன்?) பார்க்கப் போனால் சட்டம் போடுவதுதான் (5) பதவி தித்திப்பது ~விதிப்பது 7.தரத்தில் உயர்ந்து நறவு சிந்தும் பகுதி (4) நறவு சிந்தும் ~ சிறந்து = தரத்தில் உயர்ந்து 8.மர நெல்லி கீழே விழ உதறல் எடுக்கச் செய் (4) உலுக்கு 11.நெல்லைத் திருடிச்செல்ல ஏதாவது ஒரு காரணம் வேண்டும் (3) சாக்கு 12.வேற்றுருவம் கொண்டு ஒரு எழுத்து பிறழ்ந்த மழை (2) மாறி மாறி மாரி யானது பங்கேற்றோர் திருவாட்டியர் சாந்தி, அருந்ததி ( புதிய நட்சத்திரம்), சுப்பிரமணியம் திருவாளர்கள் சுரேஷ், ராமராவ், முத்து, சசி, சந்தானம் , ராமையா , பார்த்த சாரதி, நாகராஜன், மாதவ் அனைவருக்கும் நன்றி

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu