paanaiyil thaeL Answers, comments ,participants

குறுக்காக: 1.வினயம்தான் நல்கும் மேற் கூரை (4) விதானம் = மேற்கூரை 3.மாடு முட்டி இது சாய்வதில்லை (4) மாடு முட்டி கோபுரம் சாயுமா என்பது பழமொழி 4.குயில் பாட்டு குரங்குக்கு அழகு முகமா அன்றி ......(2) பாரதியின் குயில் பாட்டில் குயில் குரங்கினைப் புகழ்கிறது . ' மனிதர் என்னதான் உன்னைப்போல் அழகுபெற முயன்றாலும் ,வாலுக்கு எங்கே போவார் ?'. விடை வாலா 5.அழிக அதிர அரணுக்கு அரண் (3) மதிலுக்கு அரண் அகழி 6.வாசகர் சம்மதத்தில் உடன் வசித்தல் உண்டு (5) சக வாசம் =உடன் வசித்தல் 9.நிலாவில் உண்டா அம்மா புலி? (4) அம்புலி 11.தேவைக்கு அதிகமான பரிசு உண்டு இதில் (3) உபரி 13.இது போனால் தவிப்பர், மெய் நீப்பர் கலங்கி (3) தவிப்பர் -ய் -ர் ; கலங்கி பதவி 14.உன் கோபம் யார் மேலே? தேவேந்திரன் (மேலா)? (4,2) உம்பர் கோன் நெடுக்காக: 2.தாகம்,பயம் கலந்து வாட்டுகிறது; திரும்பலாம் சொந்த நாடு (4) தாயகம் . சவூதி போன்ற நாடுகளுக்கு சென்ற சிலரது நிலை இது தான் . அவர்கள் பாஸ் போர்ட்டைப் பிடுங்கி வைத்துக் கொள்கிறார்கள் 3.கலா ரசனையுடன் கோலம்! ஏதோ மகிழ்ச்சியான விழா? (5) கோலாகலம் 4.மணமான (2) வாச (மலர்) 7.பாதி சலிப்பில்லை; ஆனால் என்ன வாங்க முடியும் இதில்?(3) சல்லி காசு .1960 க்குப் பின் பிறந்தவர்களுக்கு இது தெரிந்திருக்காது . ஒரு சல்லி =1/12 அணா ; ஒரு அணா= 1/16 ரூபாய் . குழந்தைகளுக்கு பாக்கெட் மணியாக அரையணா கொடுப்பார்கள் . பிச்சைக்காரர்களுக்கு காலணா போடுவது உண்டு 8.கூலிப் படை சற்று கலங்க அயர்வடை. (5) சலிப்படை 9.மாலின் மனைவி இல்லை ;வெளி வேஷப் பூச்சு (5) அரி தாரம் 10.உதவி தர புலர்வதற்குள் உண்டு ஆதரவாளர் (5) புரவலர் 11.உன் தவிப்பில் வரும் ஒத்தாசை (3) உதவி 12.பானையில் தேள் இருந்து பல்லால் கடித்த தென்பவன் (4) பாரதியின் கண்ணன் என் சேவகன் பாட்டில் கண்ணன் சேவகனாய் நண்பனாய் மந்திரியாய் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய் வரும் முன் சேவகரால் பட்ட துன்பம் விவரிக்கிறார். ( சேவகர் வைத்துகொள்ளும் அளவு கவிஞ்சருக்கு எப்போ வசதி இருந்ததென்று தெரியவில்லை ) 'ஏனடா நீ நேற்றைகிங்கு வரவில்லை' என்று கேட்டால் ' பானையிலே தேள் இருந்து பல்லால் கடித்ததென்பார் ' இந்தப் புதிரில் பங்கேற்று ஊக்கம் அளித்த அன்பர்கள் திருமதி சாந்தி ( திருமதி சுப்பிரமணியம் எங்கே?) திருவாளர்கள் முத்து, ராமராவ், சந்தானம், சசி பாலு, ராமையா, நாகராஜன் , மாதவ் சில விமரிசனங்கள் Dear Vaiyanathan sir, Well and wishing you the same. Best wishes for you in whichever even you are going to participate in the sports meet. Let me know if the answers are correct. Not sure about 3 across and for 12 down the answer could be kaLvan if thirudan is not right but they both are right I guess. Anbudan, Nagarajan Appichigounder. ராமய்யா நாராயணன் பானை யில் தேள் “ அருமையான தலைப்பு !

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu