kurangku maedai, vidaikaL


குறுக்காக: 1.பாக்கள் பூக்கும் குரங்கு மேடை (7)கவி அரங்கம் 5.பத்துக்கு அடை (2) தச 6.நடிப்பில் ஈடுபாடு இருந்தால் வீடு போய் கலைந்தாலும் கர்வம் இல்லையாகலையார்வம் 7.படி மண்ணுக்கு தந்தை (2) கல் (=படி) 8.உயிர் போக உதைப்பார் மெய் விதிர்த்தாலும் எதிர் வரும் தடம் (2)பாதை 9.நட்சத்திர பெண் யானை கடலோரப் பிழைப்பு (4) மீன் பிடி 11.ஆழி சூழ் உலகெலாம் பரதனே ......(2) ஆள ** 12.பசைவரின் வன்முறை தவிர்த்து ஈட்டு வெகுமதியை (3)பரிசை 13.செப்புத்தகடுக்குள் முட்டுக்கட்டை (4)தடுப்பு 15."எம்மாம் பெரிய குளம்" ,அதை இரண்டாக்கி கலக்கிக் கொண்டாட்டம் (5)கும்மாளம் நெடுக்காக: 1.லைட் ஹவுஸ் என்றால் என்ன ? விளக்கம் தேவை (5) கலங்கரை , கலன் கரை 2.இரண்டும் கெட்ட மன்னர் வரவில் தூரிகை மன்னர் (6)ரவிவர்மன் 3.பிருந்தாவனத்தில் அணைத்துப்பாடிய கண்ணனாம் (6)கண்ணம்பாடி 4.நீளம் குடைச்சல் கடை கிடை இன்றி நீரில் தவழலாம் (4,3)நீச்சல் குளம் 5.ஏற்ற முறையில் இரட்டித்தால் பள பளப்பு (2)தக 9.முகமுடி முறுக்கும் தாயின் இளவல் (2,2)மாமீசை மா 10.முன்பணத்திற்காக சம்பளக்குறைப்பில் குறைத்தால் வயிற்றில் சுரக்கும் (4) பித்தம் 12.உடன் பிறப்புக்கும் உண்டு; பெட்ரோலுக்கும் உண்டு (3)பங்கு 14.அன்புடன் நினைத்தால் மூக்கில் ஏறும்; கண்ணை மறைக்கும் (2)புரை **ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த் தாழ் இருஞ் சடைகள் தாங்கி, தாங்க அருந் தவம் மேற்கொண்டு, பூழி வெங் கானம் நண்ணி, புண்ணியத் துறைகள் ஆடி, ஏழ்-இரண்டு ஆண்டின் வா" என்று, இயம்பினன் அரசன்' என்றாள். 111 விடையளித்தோர் திருவாளர்கள் முத்து ராமராவ் மாதவ் சந்தானம் நாகராஜன் பார்த்தசாரதி திருமதி சாந்தி யாரேனும் விடுபட்டிருந்தால் தயைகூர்ந்து தெரியப்படுத்துங்கள் அனைவருக்கும் நன்றி

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu