padiththavar: vidaikaL


1.பல்லவன் சற்று மாறி வந்தால்தான் விடியும் (5) பகலவன் 4.இது பழுக்கும் என்று கிளி ஏமாந்தது (3) இலவு இது இலவம் பஞ்சு காய் . பழுக்காது; வெடித்து சிதறிவிடும் . காத்திருந்த கிள்ளை ஏமாந்துவிடும் என்பர் . இந்தப் பஞ்சைத்தான் சில்க் காட்டன் என்பார்கள் 5.எதிர்வரும் உலகு (2) ண் ம ; எதிரே மண்= உலகு 6.பொருளற்ற சொல்லை பாவினின்று நகர்த்து (2) அசை = நகர்த்து ; அசை என்பது செய்யுள்களில் ஓசை நிரப்புவதற்காக புலவர்கள் பயன் படுத்தும் சொல்.அதை பாவிலிருந்து அகற்றினாலும் பொருள் மாறாது 9.தலையாயது விடுதலை .அது தப்பில் நுழைந்தால் திண்டாட்டம் (4) விடுதலையின் தலை வி. தப்பு உள்ளே வி நுழைந்தால் தவிப்பு = திண்டாட்டம் 11.இடைவிட்டு நன்மை செய் ;நெல்லும் கரும்பும் நிமிர்ந்து நிற்கும் (4) நன்மை செய் - மை = நன்செய் 13.'இவளுக்கே பசின்னாலும் தப்பு பண்ணக்கூடாது ' வள்ளுவர் (4) ஈன்றாள் பசி காண்பாள் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை 14.ஆதிகெட்டு அழுவோர் முதலில் தொட்டுக் கும்பிடுவோர் (4) முதலில் தொட்டு = தொ ; ஆதிகெட்டு அழுவோர் = ழுவோர் ; தொழுவோர்= கும்பிடுவோர் 15.கண்ணன் வண்ணப்பெயரெச்சம் (2) நீல (ம்) 17.விண்(2) வான் 18.மாண்புற்றீர் உம்மிடை கடை வாசல் எறும்புகள் பறக்கும் (5) கடை வாசல் = சல் ; மாண்புற்றீர் இடையில் சல் நுழைய புற்றீசல் . பறக்கும் எறும்பு (மாதிரி இருக்கும்) நெடுக்காக: 1.பதர் இடையே கொஞ்சம் வண்டியை செலுத்தினார் படித்தவர் (5) கொஞ்சம் வண்டி = ண்டி ; இது பதர் இடை நுழைய, பண்டிதர் வருவார் 2.மகவு எதிர்வர நறுமணம் பாதி (2) கம கம வில் பாதி கம 3.குதிரைக்கு அழகு, எழுத்துக்கு அலகு ,அரசுக்கு ஆதாரம் மக்களுக்கு சுமை (2) வரி 4.புகழும் பாட்டும் ஒற்றுமை (2) இசை=புகழ்= பாட்டு =ஒற்றுமையாயிரு 7.மிகச்சிறிய நாட்டின் அதிபருக்கு உலகெல்லாம் புகழ் (2); வாடிகனின் அதிபதி போப் 8.மேடைப்பேச்சாளரின் பெண்கள் (3,3) தாய்க் குலம் 10.ஆப்பிளை மட்டுமா, அனைத்தயும் கவரும் (2,4) புவி ஈர்ப்பு 11.வாலறிவன் அடி (4) வாலறிவன் நற்றாள் தொ ழா அர் எனின் 12.என் உள்ளே விழுமிய இடையே, புறப்படு (4) விழுமிய இடை = ழுமி ; என் உள்ளே இது நுழைய , எழுமின் = புறப்படு 16.மெய்யின்றி நீஞ்ச முடியாத அதமர் (2) அதமர்= நீசர் . இது முடியா விடில் நீச . ( மெய்யின்றி நீஞ்ச) ))............................................................................................................................................................................................................. விடையளித்து என்னை ஊக்குவித்தோர் ....................................................................................................... திருமதியர் சாந்தி சரஸ்வதி திருவாளர்கள் முத்து ராமராவ் சுரேஷ் (யாரையாவது விட்டிருந்தால் தெரியப் படுத்துங்கள் ) அனைவருக்கும் நன்றி

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu