suveekaram vidaikaL


Ramachandran Vaidyanathan பிற்பகல் 8:59 (1 நிமிடத்திற்கு முன்பு) பெறுநர்: kurukkumnedukk., vaarthai_vilay., Muthu, mailadmin புதிராக்கம்:ஆர் வைத்திய நாதன் குறுக்காக: 3.வெப்பத்தால் மென்மையாவதில்லை வேதமுதற்செவி (3) வேத முதல் = வெ, செவி= காது ; வேகாது = வெப்பத்தால் மென்மையாவதில்லை 5.முக்கால் வினைதீர சொல்லாடல் உயிர் சேதத்துக்கு வழி (6) வினைதீர * 3/4 வி தீ ர ; சொல்லாடல் = வாதம் ; தீவிர வாதம் 8.பசு மாட்டு சந்தையில் எத்தனாவது பிரசவம் ( என்பது முக்கியம்)(3) சந்தையில் கறவை மாடு வாங்கும் போது எத்தனாவது ஈத்து என்று கேட்பார்கள் . அதாவது எத்தனாவது கன்று என்று. 9.சிரம் நுழைத்தல் தடு உள்ளே பாதி விலை பாதி பொய் ஈயுடன் (4) த டு இடையே லை + ய் = ஈ ; தலையீடு 10.அமளி தரும் கா (2) அளித்தல் = காத்தல் ; அளி= கா 12.மாதா துணையின்றி உலோக உப்பு ஏது?(2) தாது 14.சுற்றுலாத்தளங்களில் எதிப்பட்டுக் கொண்டே இருப்பார் (வேற்றுமொழி)(2) கைடு எதிர்பட்டால் டு கை 16.தீப்பந்தம் போன்றது உடன்படிக்கை (6) ஒப்பந்தம் 18.எதிர் அணி (2) அணி= தரி ; எதிர் அணி = ரி த 19.உயிர் தியாகத்துக்கு உயிர் தியாகம் என்னைக் காட்டு (5) உயிர் தியாகம் = பலி ; பிரதிபலி = என்னை காட்டு 20.புள்ளி போட்ட தகர சவாரி செய்த இகரங்கள் சுட்டாலும் வெள்ளை (3) த க ர இதற்கெல்லாம் புள்ளி போட்டால் த் க் ர் . இவற்றில் இகரம் சவாரி செய்தால் திகிரி = சங்கு நெடுக்காக: 1. தேவைக்கு மிஞ்சிய ஆர்வம் (சந்தேகம் உண்டாக்கும் )(3,4) அதீத ஈடுபாடு 2.அமரா இசையமை (2) ( இசையமைப்பாளர் ) தேவா 4.விலங்கு மாட்டிக் கைது செய்தல் இல்லை; விபத்து வந்தால் பணம் தர உறுதி (4) காப்பு இடுதல் இல்லை ; காப்பீடு (insurance) 6.கொடுத்த பொருளுக்கு காகித ஒப்புதல் (3) ரசீது 7.சுவீகாரம் கொடு; வெள்ளத்தில் திண்டாடு (4) தத்து அளி = தத்தளி 10.ஒலி அலை துப்பல் அதற்குள் லகரங்கள் போயின் அந்த மாதிரி (2,3) ஒலி அலை துப்பல் - லி-லை-ல் ஒ அ து ப ப் ~ அது ஒப்ப 11.சிரஞ்சீவி தண்டனையில் தலை போனால் நஷ்டம் (3) சிரம் சீவி தண்டனை = சிரச்சேதம் ; சிரம் போனால் சேதம் = நஷ்டம் 13.சந்தித்தது உள்ளே தோன்றல்(4) ச ந்தி த்த து ~ சந்ததி ~` தோன்றல் 15.(துடுப்பை வலித்து வலித்து )கரம் சளைக்க (1,2) கை சோர 17.உப்பரிகையில் அமர்ந்த அசுவம் (2) பரி சற்று கடினமான புதிர் என்று ஒப்புக் கொள்கிறேன் . இதில் பங்கேற்று என்னை ஊக்குவித்த ஆர்வலர்கள் திருமதி சுப்பிரமணியன் திருவாளர்கள் சுப்பிர மணியன் சந்தானம் ராம ராவ் ராமய்யா ராஜேஷ் சசி பாலு திரு முத்து பங்கேற்றாரா என உறுதியாக தெரியவில்லை அனைவருக்கும் நன்றி

Comments

Popular posts from this blog

811 muppaalarum

807 poo maNakkum

810 asaiva uNavu