- Get link
- X
- Other Apps
Posts
Showing posts from July, 2016
aathmaavukku
- Get link
- X
- Other Apps
இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.......
Sainiya balam :vidaikaL
- Get link
- X
- Other Apps
குறுக்காக: 1.துன்பம் தரும் வேந்தன், வடிவேலரின் இரு அவதாரம் (3,4)இம்சை அரசன் ( 23ஆம் புலிகேசி) வடிவேல் இதில் இரட்டை வேடம் 5.குத்த( வருபவனை) எதிர்ப்பது சரியான(து) (2)தகு 7.அஜித்தை குறிக்கும் (3)சிரம் = தல 8.கோவை பஸ்ஸுக்கு நிகர் எது? பதில் தேடும்போது உலகம் உருண்டையாச்சு (6)கோபர்நிகஸ் 10."மது வருவதேன்?" "இனி வருவதில்லை" "இனிய சொல்" (2)வருவதேன்- வருவ = தேன் 11.ம்.. இது டுபாக்கூர் புளியில்லை . கர்னாடகாவில் விளைந்தது (4)டு ம் கூர் 13.கூட்டம் கூடி வயசுக்கு வந்து (4)திரண்டு 15.தேள் இருந்தாலும் இது தேவலோகம் (4,3) புத் தேள் உலகு 18.தெலுங்கு மாமன் கால்கள் தரையில் படா (2) பாவா 21.சம்பந்தம் இல்லாத ஊர் இல்லை . பல்லாவரம் கிட்ட இருக்கு (4)பம்மல் ( சம்பந்த முதலியார் ) 22.ரம்பம் சிக்கலில் .( விடுவித்தமைக்கு ) தலை வணக்கம் (3,4)சிரக் கம்பம் நெடுக்காக: 1.பத்து அவதாரம் எடுத்தவனிடை (முரப்பா) (3,4) கமல் இடை இஞ்சி இடுப்பு 2.சைனிய பலம் கொண்ட மலை (3)சைலம் 3.உன்பின்னால் குரங்கோ?தலை இல்லை ஆங் கின் பழைய ஊர் (4)ரங்கோன் 4...ப்பிரியர் பிள்ளையார் (3)மோதக 6.ஒர...