udaindha pal vidaikaL


குறுக்காக: 1.பெயர்தான் அப்படி; உடைந்த பல்லை ஒட்டாது (4) பற்பசை 4.இந்த உபாயம் ஒரு கத்தி மாதிரி (3) உத்தி 5.தலையெழுத்தை மாற்றிய தொங்கும் தலையணியால் மனக்கலக்கம் (5) குஞ்சலம் (தலை அணி ) தலை எழுத்தை மாற்ற , சஞ்சலம் =மனக்கலக்கம் 6.பின்னர் எப்படி சுய கௌரவம் அமைப்பில் பொருந்துதல்? (5) எப் படி , பின்னர் = படி , சுய கௌரவம் = மானம் படிமானம் (அமைப்பில் பொருந்தும் ) 8.கிழிஞ்ச கதை (4) 'கதை கந்தல்தான்' என்பது தெருவில் பேசப்படும் சொற்கள் கந்தல் 9.ஏதிலார் குற்றத்தில் செய்யுள் தொகுதி (3) ஏலாதி 10.திரும்பி வரும் சுதேசியில் ஒளி மயம் (2) தேசு = பிரகாசம் 11.மலரிடம் உலகம் (4) மலர்+ இடம் = பூ தளம் =உலகம் 13.வால்போன மக்கள் நால்வர் முன் உள்ளே முட்டைக்கடல்(5) வால் போனால் மக்கள் ~ மக்க ; நால்வர் ~ நால் நால் மக்க ~ நாமக்கல் இது முட்டை ஏற்றுமத்திக்கு பெயர் போன ஊர் நெடுக்காக: 1.உற்சவ மூர்த்திக்காய் உருகிய தீவிர உணவு பற்றாக்குறை உலகு (6) பஞ்ச லோகம் 2.அகவிலைப்படி மாற்றம் சீதாராமன் காட்டிடம் (5) அகவிலைப்படி= பஞ்சப்படி ~ பஞ்சவடி 3.நெடிய விதி இடமல்ல உலா (2,3) விதி நீடித்தால் வீதி ; இடமல்ல ` வலம் ; வீதி வ ல ம் = உலா 4.யானை சிந்திய சோற்றில் 'ஊரும்எறும்புஇங்கு ஒரு கோடி ......'(5) உய்யுமால் ( இந்த செய்யுளை தேடிக்கொண்டிருக்கிறேன் ) 6.மருமகளின் பெற்றோர் சம்மதம் முதலில் இல்லை; கல்யாண சாப்பாட்டுக்கோ வரிசை (3) சம்பந்தி- சம் (முதலில் சம் மதம் ) = பந்தி 7. எதிர்ப்பட்டதடி (2) தடி எதிர்ப்பட்டால் டி த 8.ராமேஸ்வர தலைவரைத்தேடி கமலாலயம் போவோம் (3) கலாம் 9.இந்தியாவுக்கு ஐரோப்பியரை அழைத்தது ஒரு தரம், ரெண்டு தரம் (3) ஏலம் = ஏலக்காய் ( ஐரோப்பியரை 15,16 ம் நூற்றாண்டுகளில் இங்கே இழுத்தது ) 10.இந்த நிலை முன்னேற்றமில்லாதது; கரையான் அரிக்காதது (3) தேக்க நிலை 11.இதை கையில் அணிந்தால் கண்ணாடி வேண்டாம் (2) பூண் சர்ச்சைக்குரியது . கைப்புண்ணுக்கு கண்ணாடியா என்பது நாம் பழக்கப்பட்ட பழ மொழி . ஒரு தமிழறிஞர் ( யாரென்று நினைவில்லை) எழுதி இருந்தார் ,' கைப்பூண் என்பதே சரி . காது மூக்கு கழுத்துக்கு அணியும் நகைகளை அழகு பார்க்க நிலைக்கண்ணாடி வேண்டும் கையில் அணியும் பூண்களுக்கு கண்ணாடி வேண்டாமே ' என்று . 12.முதல் முதல் சேர மன்னன் வழங்கிய பணி ஓய்வு நிதி(2) சே ர ம ன்னன் ~ சேம நிதி

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

777 mukkani