aRaikooval vidaikaL


வேட்டைக்கரனுக்கு விடைகள் குறுக்காக: 1.வேட்டைக்காரன் பொறுப்பேற்பது பறவைக்கு நல்லது (7) வேடந்தாங்கல் பொறுப்பேற்பது + தாங்கள் 5.கங்கா ,சிரிப்பதில் அழகு செய் (4) சிங்காரி இதனை சிரிப்பில் அழகு செய் என எழுதியிருகாலாமோ ? 6.ஏற்ப இரட்டித்து பொன் போல் மின்னும் (2) தக ஏற்ப = தக இரட்டித்தால் தக தக 7.முரட்டு ஆயுதம் சரிதை (2) கதை 9.சக்திக்கு மீறி வைத்தக்கால் விலக (3) அகல அகலக்கால் = சக்திக்கு மீறி 11.வரப்பில் ஒன்று களையானால் கலாட்டா (3) ரகளை கிரம்மங்க்களில் வரப்புத்தகராறு அடிக்கடி நிகழும் ஒன்று ( ஆனால் கலையால் அல்ல ) 13.ஐராவதிக்கரையில் ரங்கன் கூட கடகடத்த நகர் (4) ரங்கூன் ரங்கன் கூட - (கடத்தல்) கட = ரங்கூன் 14.டாக்டர் பாதி வேல பாதி வருஷம் போச்சு அம்பது, அன்னியர் கிட்ட சிக்கிடுச்சு வசமா நம்ப ஊரு (3) லபக் டாக் + ல ` லடாக் நமது நாட்டின் 18000 சதுர மைல் பரப்பளவு சீனாவிடம் இருக்கிறது என்பதை நினைவூட்டவே இது 15.தில் இருந்தாலும் முதல் கிணறு இறங்க பயம் (3) திகில் 16.முக்கால் செந்தில் மீனுக்கு வெளியே (3) செதில் நெடுக்காக: 1.ஈட்டியை பணி (2) வேலை 2.தாங்கள் நீங்காது நீங்கள் போனால் சுமப்பது கஷ்டம் (4) தாங்காது 3.முன் கணக்கை ஓர் (2) கணி கணக்கு= கணிதம்; முன் கணிதம் =கணி ; ஓர்தல் ==ஆராய்தல், சிந்தித்தல் 4.களியைக்கல்லாக்கும் (4.2) செங்கல் சூளை ' எனது சொந்த மூளையை உபயோகித்து எழுதிய குறிப்பாகும் ' 5.கடைப்படுக்கை சேதமாக்கு (2) சிதை 7.தவசீலரின் நீர்க்கலம் (6) கமண்டலம் 8.பல் போய் நீர் இழக்க உரல் பல தேவை (3) உலர உரல் பல -பல் = உ ர ல ~ உலர = நீர் இழக்க 9.உறைவிடம் சேவலாகி சவால் விடல் (5) அறைகூவல் உறைவிடம் = அறை 10.ரதிக்கு விடை குடையின்றி நம்பிக்கை இழத்தல் (4) விரக்தி 12.வடக்கத்திய முறையில் எல்லை மீறி செலுத்தி (4) கடத்தி இந்த புதிருக்கு கிடைத்த வரவேற்பு என்னை மிகவும் ஊக்குவிக்கிறது ( ஊக்கு என்ன விலை என்று கேட்காதீர்கள் ) ஒரு பாடம் கற்றுக்கொண்டேன் . குறிப்புகள் கஷ்டமாய் இருப்பதை விட சுவையாய் இருப்பது முக்கியம் என்று . புதிர் விடுவிப்போர் சிந்தித்துவிட்டு ' அட இவ்வளவுதானா ' என்று நினைக்க துவங்க வேண்டும் . இந்த திசையில் என் முயற்சி தொடரும் -- anbudan Vaidyanathan

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

777 mukkani