aNikalan

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................

அணிகலன்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.நட்டுவனார் சிரிப்பில் அணிகலன்கள் (5)
4.அன்றல்ல ஒன்றின்றிக் கத்தல் (4)
5.சமூக வலைத்தள புத்தகம் (4)
7.கல்லிடம் புக்க ஆழி (3)
8.புல்லில் பாப்பா பால் வேண்டாது; கலந்து கொணர மணிகண்டனை அழை (3,2)
10.விட்டு விட்டு கள்ளைக்கொடுத்து மிஞ்சியது மினி மண் வெட்டி (6)
12.துக்கமடி உள்ளே கலங்கி உதற (4)
14.எல்லை தப்பி முதல் போனால் என்ன பிழை ?(5)
15.சாகுமுன்பு ஓரத்தில் ஒரு லயம் (2)

நெடுக்காக:
1.அதிருஷ்டம் தரும் (?) தந்திர வதனம் (2,3)
2.செய்யுளால் செய்த இலக்கணம் (4)
3.சிப்பாய் கறந்த (பாலில்) விஷேஷமாய் என்ன ?(5)
4.'நமது சினம் செல்லாதவர்களிடம் பொறுமை காத்தலில் என்ன பெருமை?' (6)
6.ஒற்றையாய் தாண்டிச்செல் ;இரட்டையாய் ஓட்டை வண்டி சத்தம் (2)
9.விண்ணப்பம், அடித்தல் (4)
10.கொப்புகளை வெட்டிய அயர்வு (4)
11.கடி,துப்பு;கொஞ்சம் விட்டால் இதயத்தின் ஓசை (4)
13.கால் காப்பு எடுத்துவிடு (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum