aRiyaap peN


குறுக்காக: 1.செங்கோண முக்கோண கணித மேதை (6) பைத்தாகோராஸ் 4.பேசும் மேதையின் அறியாப்பெண் (2) பேதை 5.சிணுங்கி அழைக்கும் பேசாது கேட்காது; வெளிப்படையாய் சொல்லும் பேர் மேஜர் (3) பேஜர் 6.குருவி போல் இடைவிட்டு ஒன்று சேர் (2) குவி (=சேர்) 8.சேலம் மாமா மொய் உள்ளூர பாசாங்கு (5) மாய்மாலம் 9.மேல் பாதி மட்டும் உட்கொள்ளும் சிலரை இயக்குவதே காசுதான் (4) சில்லரை (தமிழ் அறிந்த சிலரைக் கேட்டேன் சில்லறை தான் சரி என்றனர் !தவற்றுக்கு வருந்துகிறேன். தவறுக்கு என்று இருக்க வேண்டுமோ!) 10.உடன் கற்றது வீணை; வீடு பாதியுடன் கடன் கழிந்தது ;மிஞ்சியது நல்ல கூட்டாளி (3,2) கடன், வீ கழிந்தபின் உற்ற துணை =நல்ல கூட்டாளி 11.இசைக்கென உயிரை விடும் பெண் புலவர் பாணி இனி எடுபடுமா?(3) உயி ர் = இ ; பாணினி (இசைக்கும் பெண் புலவர்) 13.தந்தை சொல் காக்க தாய் செற்ற அவதாரம் (6) பரசுராமர் நெடுக்காக: 1.ஓசை குறைத்து மெல்லப் போடா பையா (2) பைய (=மெல்ல) 2.மாதா குங்குமம் ஏற்க முதலில் போதிய வலுவுண்டா? (4) தாங்குமா(=போதிய வலுவுண்டா) 3.அஞ்சலில் அழையா விருந்தாளிகள் அழிக்கும் கிருமிகள் ஆகலாம் (3) ஸ்பேம் SPAM 4.பரம்பரையை தொடர வைக்க ,நாமம் நவில (2,3) பேர் சொல்ல (ஒரு பிள்ளை) 7.குலவிளக்கே எதிரே தள்ளிப் போ (3) விலகு 8.மாதை உற்றுப் பார்; வேறு வழி? (4,2) மாற்றுப்பாதை ( நான் சொன்னஎனென்று இப்படி செய்ய வேண்டாம் . அப்புறம் மாற்றுப்பாதை தேடவேண்டி இருக்கும்) 9.தலை விற்ற தலை போன சின்ன ராசா கலக்கத்தில் (5) தலை=சிரசு ; சிரசு விற்ற -வி (தலை போன)= சிரசுற்ற ~ சிற்றரசு(= சின்ன ராசா) ) 12.தேவர் கண் தெளிவடை; பாதி வரி இல்லை (2) தேர்(= தெளிவடை) விடை அனுப்பியோர் திருவாளர்கள் ராமையா பார்த்தசாரதி முத்துசுப்பிரமணியம் சந்தானம் ராமராவ் மாதவ் திருமதி சாந்தி அனைவருக்கும் நன்றி

Comments

Popular posts from this blog

812 iruL vilakum

811 muppaalarum

810 asaiva uNavu