thavaLai thuNai

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.........

தவளை துணை

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.சமூக நெறியாளர் விரும்புவது செய்யுளின் அடிப்படை அலகை பிழை நீக்கல் (7)
5.(தவறுக்கு) உதவல் இணை வருதல் இல்லை (2,3)
7.இடைவிட்ட பக்தரை உதவும் உட்பொருள் புகுந்து பொருள் கூறும் (4)
8.பிடிக்காதவர் முகம் முதல் முதல்அழுக்கு (3)
10.ஜாம்பவான் இனம் கண்டவரடி கொண்டவரடி (3)
11.தம் பிடித்து முத்தம்( தந்த) மனைவி கழுத்தில் அணிவது (5)
13.மந்திரங்களின் துவக்கம் உள்ளேயே நசுக்கலாம்.பேர் வரும்(3 )
14.அறங்காவலர் தந்த இவர் வெளியூர் போனால் அன்றே திரும்பிடுவார் (6)
15.துள்ளித் தந்த திவலை (2)

நெடுக்காக:
1.'உள்ளத்தில் நல்லவுள்ளம்' தந்த சீர் மிகு பதி (4)
2.கடைசியில் கத்தி பிணைக்காத ..எவ்வளவு வேண்டினும் உண்ணத்தக்க ..(5)
3.தவளை துணை கொண்டு துளைவிட்டுக் கெடு (3)
4.காற்றை சுருக்கிச் செய்த முக்கால் துவயல் ஊருக்குப் பாதுகாப்பு (3,2)
5.இதுவரை பார்த்த குறிப்புகளில் புரதச்சத்து மிகுந்தது இது (3)
6.போதாத போர்வை கூடவரும் பறை சமருக்குக் கட்டியம் (2,3)
7.சிங்கத்தின் பகட்டோடு வரும் வீரன் தூக்குக்கு அஞ்சாதவன் (3,2)
9.கரடியின் செவியில் வேண்டாததை நீக்கினால் சும்மா குரைக்கும் (5)
12.ஆரத்தப் பாத்தா விட்டம் பெரிசு; உள்ளே உள்ள உறவு அதோட பெரிசு( 3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum