naal vazhip puthir . clues with a * have answers R to L or D to U

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்......... CLUES STARTING WITH A * WILL HAVE ANSWERS R to L or D to U

நால்வழிப் புதிர்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.கொற்றம் நாடியே தேடி வரும் குடியரசுச் சின்னம் (6)
5.*தன் சைன்யத்தில் தோன்றும் 16ம் நூற்றாண்டு வைணவ மஹா பிரபு (4)
6.நகராமல் மாட்சி பெறும் மேயருக்கடங்கிய அரசமைப்பு (6)
7.*நீ அடங்கக்கூடாது என்பது கட்சிகள் தொழில் சங்கங்களுக்கு அளிக்கும் அறிவுறை (4)
9.* அந்த சாக்கில் மாறும் பணம் கட்சிக்கோ? (4)
10.விரல் நுனியில் முடியாமல் சிரிக்க (2)
11.மர்மப் படங்களின் முடிவில் வருவது விரல் நுனி கடிக்கும் ரசம் (3,2)
13.* விலக முடியாத நீளமில்லை (3)
15.சாயப் பட்டறை பற்றி தேடித் தேடி தமுக்கடித்து சொல்லப்பட்ட (2,4)

நெடுக்காக:
2.* சிலப்பதிகாரம் 2 இதுவே (5)
3.* நம் நாடு சார்ந்தது (4)
4.குடிசைப் பகுதி விட்டதும் வெளிவரும் நாவாய் துடுப்பால் நகர்வது இல்லை (3,3)
8.* மணமாகாத நல்ல பெண் சின்ன கௌண்டருக்கு ஏற்றவள் (4)
9.கலா ரசனையுள்ள கோலம் களிப்பு தரும் (5)
10.முடியாத விஷம் தரும் பேச்சு நறுக்கு தரித்தாற்போல (2)
12.2G,3G,4G அலை புது நோட்டு போல வரும் (3)
14.நமக்கு நாமே (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum