aadavar munnE

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................

ஆடவர் முன்னே

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.உருபு இன்றி பிரம்பு உருவாக நீர்பெருக்கு தோன்றும்(5)
3.ஆன ஆண்டுகள். அவைகள் எல்லையில்லாமல் புரளும் (3)
6.தூணுக்கு முன்னால் இந்திரன் சற்றே யாசித்துப் பெற்ற உண்டி (5)
7.மக்கள் என்பதைத் தேர்ந்து வரும் குடிமக்கள் (4)
9.(அகல் விளக்குஎரிய ) திரி பற்ற வேண்டும். இதில் மாற்றம் இன்றி ,பிழையும் இன்றி அறியலாம் (4)
12.சகலமும் உள்ளே அடக்கிய சொம்பு (4)
13.(வீட்டை விட்டுப்) போகும் தனையன் கொண்டதோ மனையாள் அறிவுரை (3)
14.சபாபதிக்கு வேறு தெய்வம் சமானம் ஆகிப் போமோ பண்?(3)
16.தெய்வங்கள் தலை சுற்றும் அளவு தேஜஸ் (2,4)

நெடுக்காக:
1.இதை விழையாதிருக்க அதிகாரம் உண்டு (3,2)
2.பஸ் வசதி அளபெடுக்க கலைமகள் பெயரில் ராகம் (5)
4.கரித்தூள் வெந்து தரும் இஸ்லாமியத் திருவிழா (4)
5.அகரம் போற்றல் போகம் இல்லை . புலம்பல் (5)
8.மேதை வீரியம் தலைகள் போயினும் துணிவாகும் (4)
10.தமிழ்த் தலை நகரின் கால்பந்தணிக்கு நல்ல பெயர் (5)
11.ரவியிடம் வாங்கியது காதலர்க்கே வெளிச்சம். முடியா மேதினி மறைத்து வை (4)
13.பொங்கலுக்கு முன் செல்பவன் (2)
14.ஆடவர் முன்னே அசைய (2)
15.இடை நீக்கினாலும் பொருள் இழக்காமல் செல்லும் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

777 mukkani