mudiyaadha samayam

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்...........................................................

முடியாத சமயம்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.கேள்விக்குறியான அதிகார மையம் இந்த சகோதரி (3,3)
5.கட்சி தரி (2)
6.மதுரையில் தகர்ந்த ஜிண்டால் கலங்குதல் நமக்கினிது (6)
7.முடியாத சமயம் பெயரெச்சம் (2)
8.பணிமனை தரும் வைணவ அர்ச்சகரை (4)
10.இந்தப் புராணம் கதிர்வேலன் கதை (4)
12.எதிர் பார்ப்பது ஒன்றல்ல. எல்லையிலா வலிமை (2)
14.வாரி விடாமல் தலைகொடுக்கும் குளம் (2)
15.பயனாளியைக் கிணற்று நீரோடு இணைப்பது (4,3)
17.கலைமகள் தந்த சிலேடை மன்னரின் துவக்கம் (1,1)

நெடுக்காக:
1.புதியவர். உபஜித்தர். (அவரை) விடேல். மறைந்திருந்து நோட்டடிப்பவர் (4,3)
2.பிறரை நகைத்தல் நமக்குத் தருவது வெள்ளி முடி (3,2)
3.சென்னை சென்ட்ரல் அருகே சுவர் வரி தமிழில்லை. சாலை (5)
4.தீராத கணக்கு. குழம்பித் தணிக (3)
5.சைதாப்பேட்டையில் குந்திக்கினபடி அறுந்த வாமனர் கலக்கம் (5)
9.படம் நாலும் நாலு இல்லை. அதிர்வில் வந்த வீண் பகட்டு (4)
11.வாராவதிக் கீரை (3)
13.கடிப்பது கொண்டது அநியாய முன் பணம் (3)
15.வாதாடினால் எதிர் கொள்வது தகராறு (2)
16.சிலம்பு விளிம்பில் தேடி அருந்து (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum