adharam tharuvadhu

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................

அதரம் தருவது

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.அத்திசையில் நியாயம் இருந்தாலும் உட்பொருள் சாசுவதம் இல்லை (6)
3.காதளவு எதிர்ப் படினும் நேர்மை இல்லா (2)
5.புளி காரம் சரிதான். அதில் உள்ளதை நம்ப முடியாது (3)
6.(மனக்) கிலேசம், பயம் இருந்தால் உட்கொள்ளும் மருந்து உருண்டை (4)
8.பட்டம் வரின் முடிக்காதே. மரியாதையாய் தலையில் கட்டு (6)
9.கத்தியாட (வேண்டாம்).புத்தியாட வேண்டும் .பொதுவாய் (பா) இயற்ற (4)
11.சிகப்பு முகத்தில் எடுப்பான முன் தோற்றம் (4)
13.காவலர் கையில் அகப்பட்டவனை துகையல் உள்ளே தேடு (2)
15.பல்லோர் வியக்கும் சொல்லில் கிளவிச் சித்திரம் (6)
16.மாற்றம் கொண்டு இனம் பெயர்ந்த மழை (2)
17.விற்றதூஉம் கடை நீக்கி உற்ற அகற்றி பெற்றது ஆகும் தெளித்து (2)

நெடுக்காக:
1.வடதிசை ராஜ்ஜியத்தில் 'அப்பன் சொத்து எனக்கு, சித்தப்பன் என்ன கேட்பது' என்ற உலக நாயகன் கோபாலன் (4,3)
2.பதற்றம் வந்திட உள்ளே பார் சாமர்த்தியமாய் (5)
3.அதரம் தருவதைக் கொடுக்க (2)
4.காணொளி மாயம் காட்டும் தெய்வம் ராம கிருஷ்ணர் கும்பிட்டது (5)
7.இது சுரர் வசிய ரகம் . விண்டு வெளியிட்டால் தலை வெடித்து விடும் (2,5)
10.உற்ற பணத்தில் பெரும்பாலும் உற்பத்தி இல்லை . சுவாசிக்க முடியாத நிலை (4)
12.(உதட்டு) ஓரத்தில் புன்னகை . ஆனால் பற்றி எரியும் அடையாளம்(2)
14.'பெரிய மனிதர்களுக்கு' ஒரு வித துணை (3)
15.உரிச்சொல் தேர்ந்து பொழி (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

777 mukkani