annai theresaa

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்...........................................................

அqன்னை தெரெசா

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.நம் மக்கள் வெளிநாடுகளில் அநியாயமாய் நடத்தப் படுவதைத் தடுப்பது அரசின் அறம் சார் கடமை (5,4)
4.மூவரணி பப்பு வர வாய்ப்பில்லை; சீனியாரிட்டி தான் அடக்கம் (2,3)
7.வாயு (அளவு) சரிபார். அதனால் மூட்டுவலி வரலாம் (3,2)
8.வானத்திலிருந்து குதித்தவள் பறவை போல் ஒலிக்கலாம் (30
10.(ஆற்றில்) வந்த வண்டல் கொள்ளும் கேட்டு வாங்கல்(4)
11.திரவத்துடன் அடர்த்தி குறைந்ததால் நிகழ்வதை திமிர் என்பர்; இது பெரும்பாலும் தவறு (4)
13.கழுத்துக்குப் பின்னால் பிரித்திடத் தோன்றும் (3)
14.காசுக்குப் பின் (அலையும்) பாகனும் உட்கொண்டது ஓராண்டு (3)
16.கூர்க்கமோ ஆழ்கடல் கொண்டது மறைபொருள் அச்சத்துக்கு மாற்றென்பர் (3,2)

நெடுக்காக:
1.பர்தாத் தீர்ப்பாயம் தரும் உட்பொருள் (6)
2.(தொன்மையை ) பாலிக்கப் பிறந்த செய்யுள் வகை (4)
3.வருகிற புதனிலிருந்து அன்னை தெரசாவுக்கு உரிய அடை மொழி(3)
5.உளமறிய மாட்டாத கோணல் மாணல் சொல்லாடல் (4,3)
6.வாட்டமாகக் கொள்வது உணவு தயாரிக்க (4)
9.சிரித்தவாறு உருவகப்படுத்து (4)
11.தொண்டை வழியே ஒருமுறை இறங்கும் போது தோன்றும் இடர்(3)
12.நீதியரசன் தரும் விண்ணப்பம் (2)
14.அவமானத்தால் குறுகுமுன் தலைகீழாய்ச் செய் (2)
15.தாழ்ப்பாள் உடைந்தது உள்ளுக்குள் வீண் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

777 mukkani