uyaram kammi : vidaikaL


உயரம் கம்மி : விடைகள் குறுக்காக: 2.காதலால் துள்ளும் மனசுக்குள் தோன்றினாலும் புகை கக்கும் (5) மனசுக்குள் மத்தாப்பு 6.நீர் நிலை உயரம் கம்மி (3) குட்டை 7.மாயமான குறைந்த வெளிச்சம் எதிர்கால எதிர்பார்ப்பு (2,4) ஒளி மயமான ( மாயமான குறைந்த ) 9.தனக்குள்ள இந்த சொல்லை... இல்லை வேண்டாம் (3) இந்த சொல்லை - இல்லை = ந்த சொ ~சொந்த 10.சேராத இடம் சேர்ந்த ராதை மகன் (4) ராதையின் மகனான கர்ணனுக்கு ராதேயன் என்று பெயர் (. கங்கையின் மகன் காங்கேயன் .ஜனகனின் மகள் ஜானகி) 11.கவின் பூத்த பூ எடுத்து தொடுத்த திறமைசாலி (5) கவின் பூத்த - பூ = க வி ன் த் த ~ வித்தகன் = திறமைசாலி ( with the gun என்பதால் இல்லை) 13.விஷமிட்டு ஜன்மம் விடுமின் விடுமின் ; மிஞ்சியது ஸ்வராரம்பம் (5) விஷமிட்டு- விடுமின் = ஷ ட் ஜ ம ம் ~ ஷட்ஜமம் = ஸ = முதல் ஸ்வரம் 15.கூடவே செல் பிறகு பந்தம் தோன்றும் (2,3) பிறகு= பின் ; பந்தம் = பற்று ; பின் பற்று = கூடவே செல் நெடுக்காக: 1.ஒரே ஒரு ராஜாவுக்கு ...............(2,2,2) ஒரே ஒரு ராணி 3.இது கனமானதா? (இல்லை )புரண்டு கொடையாக (வந்தது) (4) தானமாக = கொடையாக 4.ஊருக்கு புதுசா? உள்ளே நுழை (2) பு கு 5.இலையில் சோறு போட்டவன் கடவுள் (6) இலையில் சோறு படைத்தவன் 8.மீனாவுக்கு அப்பா மதுரைக்கு ராஜா (7) மீனா= மதுரை மீனாட்சி ; அவுங்க அப்பா மலையத்வஜன் ( வளர்ப்புத் தந்தை) 11.பிளவிடம் கொண்ட ஆண்டொன்று சொல்லி (4) சொல்லி= விளம்பி ( என்றொரு தமிழ் ஆண்டு) 12.நீர் அதிர்ந்து சிந்த பளு தரும் இடை இழக்கும்( 4) பளு தரும் . இழந்த இடை ரு . இழந்த பின் தளும்ப = அ தி ர்ந்து சிந்த 14.பேதமற்று உள்ளே போனால் கொடுப்பினை (2) பேதமற்று உள்ளே பேறு = கொடுப்பினை -- anbudan Vaidyanathan

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum