mOdhaka veNbaa

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்...........................................................

மோதக வெண்பா

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பயங்கரவாதத் தாக்குதலை முன் கூட்டியே அறிவிக்க வேண்டிய இலாகா (4,2)
4.நெளிவு சுளிவு போக்குமுன் விலக்கு (3)
5.இவர் தலை வாசல் கால் பட வேண்டாம் (5)
7.சாணை ( பிடிக்கும்) ரவியா? கலந்து கேட்டறிதலா? (5)
9.வேள்வி முடியாமல் எதிர்ப்படும் கங்கைத் தலம் (2)
11.பாரசிகர் மட்டும் வெளிப்படுத்தும் இசைப் பிரியர் (3,4)
12.மெய்யின்றி தரித்து திரும்பிய முடிவற்ற வேகம் (3)
13.அப்பவெல்லாம் போல மற்றவருக்கு எடுத்துக் காட்டு (2,3)
15.'என்னமோ சந்தடி' ; பார்த்தால் ஏமாற்று வேலை ( 3)

நெடுக்காக:
1.சட்டப்படி தொழில் செய்ய அச்சடித்த காகிதம் (4)
2.புது இலைகளை வெளிப்படுத்தி (வளரும்தாவரம் ) (3,3)
3.சட்டமாக,முறைப்படி,வகையாய் ஒருகணை உட்கொண்டு (6)
6.(என் புகழ்) அறியானோ? பின்பாதி நான் தானோ (2)
8.யாருக்கும் தெரியாமல் ( விஷயத்தை) கசிய(விடாத) ரகமா( 6)
10.புத்தில் காண புலனை மறுத்து கடைகளை சீரமை (2,2)
11.மோதக வெண்பா வெண்மை நீங்கின் விளைவது கொடும்பழியோ ?(4)
13.முடிந்தால் முதலில் தீர்த்துக் கட்டு (2)
14.தாடி வெச்ச தவசி (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

777 mukkani