parikshiththu

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்...........................................................

பரிக் ஷித்து

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பரிக்க்ஷித்து மரணத்தில் தோன்றிய 20ஆம் நூற்றாண்டு மகான் (3,2)
3.தரிசனம் தந்ததில் உயரம் குறைந்த (4)
4.புள்ளிமான் வேகம் துளிர்விடும் கள்ளியோ கொள்ளும் (6)
7.கவரிங் முடியாமல் வீசின் காற்றை அசைக்கும் மரம் (4)
9.காது திகட்டப் போற்று (2)
10.அமரரிடை சரசம் இனி சண்டையில்லை (5)
11.எளிதான பாதி முற்றுப் பெறா கொடை . இதுவும் லஞ்ச (ஊழல்தான் )(2)
13.இதன் உலகம் தோன்றி 5 மாமாங்கம் ஆச்சு . இப்பதான் இது வருது (4)
14.வெட்கமின்றி சாவு மாற்றி கூவுது (குயில்) (3)
16.சொல்லு முத்தி மல்லு உள்ள ஒண்ணும் நேர்மையில்ல (6)

நெடுக்காக:
1.தலை தெறிக்க துரத்து நிகழ்ச்சி கிடையாது(3)
2.மரம் வந்தால் உள்ளே மேக மூட்டம் (5)
3.மொதல்ல சம்பந்தம் பின்ன மொத்த அர்த்தம் இதான் இல்வாழ்க்கை (5)
5.மேலே வரும் கூட்டம் (3)
6.மெய்யினை வளைத்து மூச்சினை அடக்கி யோசனையுடனே கானம் புக்க நியமம் (5)
8.எதிர்த்தால் ஏற்றத்தாழ்வில்லா இரட்டித்தால் அசமந்த(ம்) (2)
9.தமிழ்வாணனின் தைரியம் பக்க பலம் (3,2)
11.பாட்டின்வேகம் களத்தில்தான் தெரியும் (2,2)
12. பாகை வைத்து கலக்கி வடிகட்டினால் அரியாசனம் அளிப்பான் பரதன் (3)
14.அறை விட்டு போருக்கழைத்தல் அலறல் (3)
15.ஈட்டி ஆளானால் விளிக்கும் பெயர் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum