paNappetti

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்...............................................................................................

பணப்பெட்டி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
3.தோழி தரப்பு பாதி பொறுமை குணம் (4)
5.ஆற்றுப் பெருக்கற்றால் அளவின்றி அள்ளிச் செல்லல்(3,3)
6.நாக்குப் படைத்தென் பயன்கொல் இறைவன் நாமத்தை இசையா தவர் (4)
7.இருத்தல் அதர்மம் போல் போம் (என்றால்) போம் (5)
11.பயம் வந்ததும் உள்ளே பணயம் (5)
12.இது குரங்கோ ? இல்லை; சிறுத்துக் கலைந்த நன் மரம் (3)
14.புரள்வது முடியாமல் வர இல்லை ; பறக்கலாம் (2)
15.மழவர் பல்லிடை இறைவனுக்குகந்த மலர் (6)

நெடுக்காக:
1.இடப்புறம்=வலப்புறம் , (இசை)(5)
2.கடையில் பணப்பெட்டிதான் படிக்கவில்லை (5)
3.அயராது (ஓட) மச்சக்காளை வால் கொஞ்சம் வெட்டணும் (6)
4.ஐயப்பன் கொண்டு வந்தது தபால் இல்லை (3,2)
8.முன்பெல்லாம் தூர் தர்ஷன் இதற்கு வருந்தும் (5)
9.இரும்பை இழுப்பவள் விரல் போல் ஒரு மலர் (4)
10.இந்த உபயம் உந்த விட்டால் சொல்ல வரும் (4)
13.அமிழ முடியா ஆழம் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

777 mukkani