piRai madhi

ந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................

பிறை மதி

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.

Transliteration scheme:

குறுக்காக:
2.குருதி பருகும் பூச்சி இனம் காட்டும் (4,3)
6.அலைகளிடை எதிர்ப்பட்ட பிறை மதி (2)
8.முடியாத ஆண் யானை (கண்டு) மகிழ் (2)
9.நேரில் கண்டு சொல்பவர் பெரும்பாலும் சிதைந்த ருசு (4)
11.இல்லையென்னல் மறுபிறப்பு அளிக்கும் (4)
12.அடித்து நொறுக்கினால் இந்தப்பொடி விடுதலை கொடுக்கும் (3)
15.காத்திரு , உள்ளே கைவினைப்பொருள் கிடைக்கும் (2)
16.(உலகு) இயற்றியான் (6)
18.முந்தித் தரும் தந்தி தரும் தயிர் (2)
20.நேப்பாளத்தை அடுத்து மாற்றி அணிந்தான் (4)
21.பக்கம் போனால் பகட்டுக்குப் பட்டும் தலையில் தாங்கி (4,3)

நெடுக்காக:
1.நிலவரம் தலை கீழ் (3)
3.வரதாச்சாரி ஆங்கிலத்தில் புலி (3)
4.கொடையாளி பின்னால் கோவில் சிற்பம் (2)
5.கடைசிக்கு முன் சுற்று (2,3)
7.படைத்தவன் கருத்தில் ஜனிப்பதை நிறுத்தல் (3,2)
10.மணிமேகலைக்கு அமுத சுரபி அளித்த கோமகன் (1,5)
11.அதிர்ந்த மன்மதன் உயர்ந்தவன் (3)
13.விதையூன்றி பின்னால் ஏசு (5)
14.தலைகீழாய் நின்று நிறுத்து (2)
16.பக்குவத்த பாத்தா 2 குருணி (4)
17.வந்தவரை வந்தபின் மலை (2)
19.கில்லிக்கு சகா எட்டிக்குதி (3)
20.காருக்குப் பெட்டி காலுக்கு மாற்றுமொழிக் காப்பு (2)
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum