singkaLaththeevu

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்......... சிங்களத்தீவு

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.மகாத்மாவின் கருத்துப்படி இவர்களுக்காகத்தான் வர்த்தக நிறுவனங்கள் . இது வேடிக்கையில்லை ( 7)
5.நடு கடைசிக்குப் போய் முதலில் சேதி வந்தது. இது பேரிடரில் அவசியம் ( 4,3)
6.5 கு இருந்தால்தான் இது சரியாய் நடக்கும். சேர்த்து வை. உள்ளே இருக்கும் (2)
7.லாபம் (என்று) இசை. பிரயோசனம் உண்டு (5)
9.கடுத்த முகத்தில் தோன்றும் சிகரம் ( 3)
10.வாயிலிருந்து காற்றை வெளியேற்ற முதலில் ஊன் தவிர் (2)
11.ஆரம்பத்தில் அல்லி மலரும் (4)
13.குருடன் இடறிய தூங்கும் வேங்கை (3,2)
14.கையில் முடியும் ஸ்பரிசம் (3)

நெடுக்காக:
1.சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைத்த படை (3,2)
2.பாதிக்கு மேல் கிடந்து கரத்தினுள்ளே தொடர்ந்து தன்வசமாக்கு (4,4)
3.தலைகீழாய் நிற்கும் விளையாட்டுச் சின்னவர் (3)
4.இறகுப் பந்துக்கிடம் தந்து பின்பாதி சேர்த்தவர் திரு மணாளர் (4)
8.13 கு விழிப்புற்றும் தெம்பாயும் உள்ளது (3,2)
9.வர்த்தகத் துவக்கப் பணம் (4)
11.ஆரம்ப சுற்றின் ஆரம்பங்கள் கவியின் அடை (2)
12.மகாபலி புரத்தில் காவு (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum