vinaayakaa

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.........

விநாயகா

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1. மெள்ள மெள்ள எழுதியவர்(6)
5.துரியனை நம்பி சகுனி சொல் கேட்டது தவறு (3)
6.ஆச்சரியமுற்று மெய் வந்து பரவியதும் பரம்(பொருள்) விலகிற்று(4)
8. முதல் சுற்றில் மணம்தான் மூச்சு (4)
11.பொங்கலுக்கு முன் செல்பவன் (2)
12.12.மாட்டு ஸ்வரம் புகுந்த காயம் ஒரு பணி (4)
14.வந்த போது உள்ளே சென்ற (3)
15. வேகப்பந்து வீசுபவரை நினைவூட்டும் கோணல் (4)
16.ஊர் உறங்கும் வேளை; எல்லைகளில் நரிகளின் கூச்சல் (2)
17.மின்காந்த அலைகளை அளக்க விட்டு விட்டு உள்ளே ஓர் பாராட்டா?( 3)
18.பாசம் நடிப்பு தலை வெட்டி அன்பளிப்பு(5)

நெடுக்காக:
2. உள்ளுக்குள் இரண்டு போனால் வாழ்வே மாயம் ,மந்திர ஈர்ப்பு (4
3.சுமங்கலி பின்னால் யுகமே பெயர் சொல்லும் (2)
4. ஊர் மக்களிடையே வாக்கு முடிய, நல்ல நிமித்தம் (4)
5.வாலிக்கு முன்பு பிற ஜன்மங்கள் தொடரா(3) 7
7.பாதி துக்ளக்; பாதி போக்கிரி; மொத்தத்தில் தொட்டது துலங்காதவன் (4)
8.நெடில் நீத்து பேசும் மாயவரம் கிறங்கினும் கணவனை வரிக்கும் (6)
9. களைப்படை (2)
10.போராடும் தலம் தன்னில் மறை பொருளே ,விநாயகா( 5)
11.ஊடுதலே போர்க்காலம்;அதில் காண்கின் செல்லத்தகாத தலம் (3,2)
13. அன்னைக்கு அண்ணனை ஆட அழை (4)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

777 mukkani