ezhuvaan thozhuvaan

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.........

எழுவான் தொழுவான்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.சிற்றன்னை வார்ப்பு உட்கொண்ட மழையின் மஹிமை (2,4)
3.பின்னால் நகரும் சின்னஞ்சிறு பெண் (2)
5.செயற்கரிய (செயலில்) வெண்மையானதில்லை (3)
6.திருவிடைமருதூரில் பிரும்மஹத்தியை நீத்த மதுரை மன்னன் சிவனில் பாதி ஆரணங்கு தன்னில் மீதி (4,5)
9.ஆலை வற்றியதும் வலை எதற்கு?செய்து முடித்ததும் போதும் ( 6)
11.பகல் போனது பசி அகலல் தேடி (3)
12.பணிவார் இடையே குடிகொண்ட கலை மகள் (2)
14.விடல் விடுதல் வாடவில்லை -எஞ்சியது நாயர் குழைக்கும் சினையை (2)
15.எழுவான் தொழுவான் கடையில் முன்னுக்குப் பின் விசும்பு (2)
16.அடிமுதல் துய்யேன் பாதி .அண்ணலே அறுவருப்பில்லை , ஆழ்ந்த பக்தி (3)
17.முதலும் முடிவும் கல்லே. இணைந்தால் செதுக்கிய சிற்பம் (4)

நெடுக்காக:
1.வலி(தரும்) வாதம் தருவது ராமகாதையில் நிரந்தர வாக்குவாதம் (2,3)
2.சிறப்புக்கு சரிபாதி பறக்க வேண்டும் (3)
3. துணிவுள்ள அதைப்பிரிய பாதி போதும் (3)
4 பயன் கொண்டு பேசுமுன் கொஞ்சம் ஆழம் .இது குலைவுண்ட வாழை வகை (3,3)
5.ஒரு கணம் உள்ளே மடி . கல்யாணம் ஆகும் (5)
7.பாவாணன் ஆக்கிய வற்றுள் ஒரு அதிருஷ்டசாலி ( 6)
8.சிற்றலை பொதியே உள்ளே கிடைத்த தங்க விக்கிரகமே (2,3)
9.கண்டத்தில் விடம் கொண்டவன் பதி போல ஆவாய் நேர் செய்து (4)
10.மெய்விட்டு வாய் கணித்து கலங்கினும் தைரியமாக (4)
13.இஞ்சி விற்று இற்றுப் போய் தரத்தில் உயர்ந்து (3)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

777 mukkani