MaNiraththinam

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்...........................................................

மணிரத்தினம்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.யாகத்தால் பெற்ற மகன். இவனிடம் தப்பு இருந்தாலும் புதன் அடக்கம் (3,5)
6.அகன்ற கடற்கரையுடன் சாதனையாளர்களை ஈர்த்துள்ள நகரம் (2,1,3)
7.அவனிடம் உலகம் அடங்கும் (3)
8.பாரிசாத (மலர்) தாங்கிய கால் நடையார் (4)
10.எல்லைகளில் புகுந்ததை மண்ணில் போட்டு மூடு (2)
11.மேலடுக்கு (மக்கள்) தாங்கும் தரையே உயரம் (2)
12.மணிரத்தினம் அடக்கி வைத்துள்ள வட மொழிப் பெண் (3)
14.மேக நிறக் கருப்பனுக்கு அழகான பெயர் (3,4)
16.கொடடி பெண்ணே, என் முகமுடி(யை) (2)
17.இப்பவெல்லாம் மாவிலை வாங்கினாலும் கொடுக்கணும் காசு (2)

நெடுக்காக:
2.சகடம் வலிக்கும் வருமுன் மாண்டிடும் தேர்ந்து (3,2)
3.பொன்னினும் அரிய கோளின் வழி ( நீண்ட வட்டமாம் ) (4,2)
4.கவரிமான் அணிவதில் GST அடக்கம் (3,2)
5.காய் கறி நறுக்குபவர் எல்லாம் தெரிந்தவர் போல (4)
7.சாணம் அவதாரம் கொள்வது இயல்பன்று (6)
9.காவிரிக்கரையில் மகுடேஸ்வரர் கோவில் கொண்ட சிகை தருக (4)
10.தனயள் தேடிப் புல் தவிப்பது காணீர் (4)
13.மன்னியுங்கள் ; பாதி அரசனும் அரசனே (2)
15.வேடன் வருதலை நோக்கித் தருவிலை.இதில் சிக்கல் நேரலாம் (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum