PAEY MAZHAI: ANSWERS,PARTICIPANTS, COMMENTS

குறுக்காக: 1.பம்பரம் பார்க்கச் சென்றதும் உள்ளே வழிந்து நாசம் (9) செம்பரம் பாக்கம் வழிந்தது மின்வெட்டு போல அரசியல் மாற்றம் உண்டாக்கலாம் ..பம்மல் அருகே உள்ள என் நண்பர் வெகுவாக பாதிக்கப் பட்டார் 6.புனல் விழக் கண்டு பெரம்பூரில் வெள்ளம் (3) புழல் ஏரி 7.நட்பு மீது தேர்ந்து ஆணையிடு. வெள்ளத்தில் போகாமல் காக்கும் செயலாகும் (4,2) ஆணையிடு= பணி ; மீட்புப் பணி 9.இசையுள் வியாபித்தானோ ! சரிபாதி இசைக் கருவி(யாய்) (3) பியானோ" வெள்ளத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் "இது என் மனைவியார் . " வெள்ளத்தில் பியானோ ஒன்று மிதந்து போனதை டி வி யில் பார்க்கவில்லையா " இது சமாளிப்பு . 11.ஆய பணிகள் (அனைத்தும்) உயிரை விட்டுத் தேடி வேற்றூர் செல்வோர்( 5) பயணிகள் 13.புள்ளி விபரம் தேர்ந்தால் பொய் செய்திதான் கிடைக்கும் (3) புரளி (there are 3 kinds of lies; lies, damned lies, statistics) 16.(ரயிலை) தலை தெறிக்க துரத்து. கடைசியில் நீக்கமே மிஞ்சும் (3) ரத்து 18.மழை மாயமாக போன ஆண்டுகள் உண்டு .2015 சற்றே மாறுபட்டுள்ளது (2,4) மழை மயமாக 20.எதிர்த்து நிற்கும் பெண் (2) து மா ( திரு எஸ் பி மன்னிக்கவேண்டும் ) 21.தீர்வு போனால் சொல் நடுவே நீங்கி நீர் நடுவே தோன்றும் (4) தீவு போல் 22.கனவல்ல. அதிர்ந்த மக்களவையில் ஈர்ப்புத்தீர்மானம் (3) கவன ஈர்ப்புத் தீர்மானம் நெடுக்காக: 1.மீனின் நீர் வடிகட்டி (3) இது செவுள் (gills) இரண்டு கன்னங்களிலும் இருக்கும் . இதன் வழியாய் நீர் உள்ளே போய் அதிலுள்ள ஆக்சிஜனை மீன் எடுத்துக் கொள்ளும் . மீனின் உடல் மேல் இருப்பது செதில்கள் (scales) 2.பப்ளிசிடி பணியில் மிஞ்சியது உணவின்மை (2,4) பசி பட்டிணி . பட்டினி தான் சரி என்பது சுரேஷின் வாதம் . பசியால் வந்த பிழை பொருத்தருள வேண்டும் சுரேஷ் 3.பத்துப் பாத்திரம் .நாலை விடு. குலுக்கலில் வருவது (நம்மை) மாற்றுவது (5) பாதிப்பது 2 வாரங்கள் கழித்து இதைப் பார்த்தவுடன் எனக்கே விடை தெரிய வில்லை . இனி 9 P 5 மாதிரி காம்பினேஷன் தவிர்க்கிறேன் 4.புற்கள் முக்காலும் இருவருக்கும் பொதுவென்று வைப்போம் (3) கற்பு இது ஆண் பெண் இரு பாலார்க்கும் பொதுவாகக வேண்டும் என்பது பாரதியின் கருத்து 5.வெள்ளத்தால் நின்நோவு எல்லாம் இந்த ஸ்பானிய சொல்லால் (2,2) எல் நினோ . புதிர் வெளிவந்த பிறகு இந்த சொல் செய்தித்தாள்களில் மிகவும் அடிபட்டது 8.தன்னார்வக் குழுக்கள் செய்வது காரத்துக்குத் துணை (5) உபகாரம் ( மொக்க ஜோக்கு என்று சொல்வது காதில் விழுகிறது) 9. பிளவு பயங்கரமா? உள்ளே நீர்பெருக்காகத் தோன்றியது (6) பிரளயமா 10. நோயாளிக்குள்ளே ஒரு மிருகம் (2) யாளி (ஒரு mythical மிருகம்தான் ) 12. (எட்டுத்) திசைகள் இடையே சாட்டை (2) கசை 14.பேய் மழையில் கிடைத்த பெட்டி (2) பேழை ( இப்படி ஒரு பேழையில் தான் சீதை குழந்தையாய் மிதந்து வந்தாளாம் ) 15.(சுமை) கனமாச்சோ? உள்ளே துக்கமான (முகம்) (4) சோகமான 17.வீடு வாசல் துணி போயினும் போகாத தைரியம்(3) துணிவு (வு எங்கிருந்து வந்தது? தைரியத்திலிருந்து?) 18.நமதுடலில் சரிபாதி போனபின் மிஞ்சிய கடிதம் (3) மடல் 19.மதத்துள் உறைவது நிதானம் தராது (2) மது Parthasarathy Srinivasan டிச. 10 பெறுநர்: எனக்கு Topical and excellent. As a Chennai resident I could empathise with the desperation that thousands had. We personally had no problem as we left for Bangalore from Chennai on 30th Nov after a week's stay when there was no rain. They began the night we left. Our house though on Ground floor escaped damage as our street as well as the house are on higher levels compared to the surroundings. My ex-peon said that but for seepage in the bath-rooms there is no problem. We will see personally when we go there next week. சென்னை வாழ் மக்கள் துயர் நீங்க ப்ரார்த்திக்கிறேன்.--ramaiah NarayaNan K.R.Santhanam டிச. 10 பெறுநர்: எனக்கு, எனக்கு A very nice timely puthir விடையளித்தோர் திருமதியர் சாந்தி, சுப்பிரமணியம் திருவாளர்கள் சந்தானம் பார்த்தசாரதி முத்து ராமராவ் சசி பாலு சுரேஷ் ராமையா அனைவருக்கும் நன்றி

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

777 mukkani