maezhith thozhil

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.............................................................................................................

மேழித் தொழில்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.பின்னால் வர்ணம் கொண்ட மேழித்தொழில் (5)
3.நுழைவாயிலில் அசையாதிருத்தல் (2)
4.உற்றவர் கொண்ட உப்பு நிலம் (3)
5.நின்றவர் பணயம் பற்றி வரையறுத்தல் (5)
6.கோவாவில் கோல் விட்டால் காண்போர் கண் குளம் (2)
8.வண்ணப்படம் குறைந்து கருப்பு வெள்ளை சேர்ந்தது (6)
9.மீனுக்குள்ளிருந்து தப்பி வா(2)
11."கண்ணா, இவர்களோடு நீ களிப்பதோ! என் மனம் அலை பாயுதே"(3,3)
12.பயிரிடுவோருக்கு பண உதவி இனி மாயம்; உயிர் போய்விடும் (4)
13.பாதி கர்ப்பம் ? குழவி முடியாது ;வயலில் வரும் பயன் (4)

நெடுக்காக:
1.பயிர் விளையும் பூமி (2,3)
2.மன்னருக்காக வேவு பார்ப்போர் பள்ளியில் காக்கி சட்டை அணிவர் (6)
3.அன்றாட வழி நடத்தல் பின்னால் வெள்ள ஓட்டம் போல (5)
7.எதிர்ப் பலா கையாக நட்டமின்றி (6)
9.மீதி எனில் உள்ளுக்கு மேல் (4)
10.சோக உணர்வு பாதி அயர்வாகும் (3)
11.இப்படி சொல்வதற்குள் இருநூறு பாடுவர் புலவர் ( 2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum