seydhith thamizh

இந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும்............................................................................................................. இந்தப் புதிரில் வரும் சில சொற்கள் செய்தித்தாள்களில் வருவன நியமனம் , பறிமுதல், பாலியல் , தொலை நோக்கு, கூட்டணி, இடை நீக்கம், கண் காணிப்பு , அரசாணை போன்றவை ,

செய்தித் தமிழ்

This is a web based solver for Tamil crosswords that lets you directly type Tamil characters using an English keyboard. For example, for "புதிர்", type "puthir". You click on a cell to highlight the word. If a cell is part of both across and down clues, when you click again, it toggles the highlighting. Play with it and send your feedback to puthirmayamgmailcom.


குறுக்காக:
1.அல்லி மலர்ந்த (4,3)
4.சிரத்தை வைத்த தகரம் இரண்டின்றி சுவை கண்டவை (5)
5. பலசரக்கு சத்தம் கூட பணக்கார வீடு(3)
6.சிவா கொண்ட புத்தி பலம் சிற்றறிவால் அவா (6)
8.அன்னை இணைத்த உடைசல் பின்னை அளவு தரும் (3)
9.எதிரில் குதிக்க முதலாவதா?(2)
10.ஸ்படிகம் தந்த முன் பணம் வீட்டுக்கு (3)
12.வட்டத்தின் இரு புள்ளிகளை இணைக்க வெள்குறு (2)
14.வெளியேஇருந்து கணக்குப் போட பங்கேற்காமல் இருக்க (7)

நெடுக்காக:
1.முடிவின்றி ஆசி தரவும் வரும் உதவி (4)
2.பிரித்துக் கற்றல் இறைவனையே இல்லாதவனாக்குமா?( 6)
3.காலு சலங்கை பாதி, போனால் போகிறது என்று கொடுத்தது (3)
5.குற்றமற்ற கல்வியே செல்வம்; மற்றையவை செல்வமல்ல (4)
6.வற்ற (வற்ற) அள்ள (அள்ள ) உள்ளே எண்ண முடியாத (செல்வம்) (5)
7.முதன் முதல் அரண் உயிர் விட முன்னுக்குப் பின் ஒத்துப் போகாதது இசை (5)
8.பித்தா உன்னுள் என் அப்பா (2)
11.விழியழகி கால் வைத்தால் சிக்கலாம், சிதறலாம் (3)
13.மெய் போய் நோக்கல் வலிக்க (2)
Transliteration scheme:
உயிர்a : அ|aa, A : ஆ|i : இ|ee,I : ஈ|u : உ|oo,U : ஊ|e : எ|ae, E : ஏ|ai : ஐ|o : ஒ|oa,O : ஓ|au : ஔ|
மெய்k,kh,g : க்|ng,nG : ங்|c,ch,s : ச்|nj,nY : ஞ்|d,t : ட்|N : ண்|dh,th : த்|n-,nt : ந்|b,bh,p : ப்|m : ம்|y : ய்|r : ர்|l : ல்|v,w : வ்|z,zh : ழ்|L : ள்|R : ற்|n : ன்|j : ஜ்|sh : ஷ்|S : ஸ்|h : ஹ்|
உயிர்மெய் (மாதிரி)ka : க|kaa,kA : கா|ki : கி|kee, kI : கீ|ku : கு|koo,kU : கூ|ke : கெ|kae,kE : கே|kai : கை|ko : கொ|koa,kO : கோ|kau : கௌ|k: க்|
ஆய்தம்H : ஃ
நகல் அனுப்புக

Comments

Popular posts from this blog

778 maantthidal

776 kadalil

807 poo maNakkum